ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பாக்கியாவால் வில்லனாக மாறி புலம்பி தவிக்கும் கோபி.. உசுப்பேத்தி விடும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில், பாக்கியா நினைத்தபடி கோபியிடம் விட்ட சவாலில் கெத்தாக ஜெயித்து விடுகிறார். ஆனாலும் இதுவரை மனதில் பூட்டி வைத்திருந்த ஆதங்கத்தை கொட்டி தீர்க்கும் விதமாக கோபியை வச்சு தரமான சம்பவத்தை செய்து விட்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கோபி கடைசியில் குடும்பத்தில் அனைவரிடமும் கெஞ்சும் நிலைமைக்கு போய்விட்டார். ஆனாலும் இதற்கெல்லாம் அசராத இவருடைய குடும்பம் பாக்யாவிற்கு சப்போர்ட்டாக நின்று கோபியை வெளியே துரத்தி விடுகிறார்கள். இதனால் அடிபட்ட பாம்பு என்ன செய்யும் அடுத்து படையெடுக்க தயாராகி வருகிறது.

Also read: ஜான்சி ராணியை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை கூட்டும் ஜீ தமிழ்.. டபுள் மடங்கு சம்பளத்தை கொடுத்து இழுத்த சீரியல்

அதாவது எல்லாத்துக்கும் காரணம் இந்த பாக்கிய தானே. என் குடும்பத்தை மயக்கி அவங்களை வச்சே என்னைய துரத்தி விட்டாள். இதே தான் நான் பாக்யாவிற்கும் திருப்பிக் கொடுக்கப் போகிறேன். எப்படி என் குடும்பத்தில் இருந்து என்னை பிரித்தாலோ, அதே மாதிரி என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்து பிரித்து பாக்கியவை தன்னந்தனியாக நிறுத்தி காட்டுவேன்.

இப்படி வில்லன் ரேஞ்சுக்கு கோபி மாறிவிட்டார். போதாக்குறைக்கு ராதிகாவும் கோபியை நல்லா உசுப்பேத்தி விடுகிறார். இதுவரை காமெடியனாக, கோமாளியாக இருந்து வந்த கோபி இனிமேல் வில்லனாக மாறப் போகிறார். இந்த கதாபாத்திரத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பார் என்று அனைவரும் தெரிந்த விஷயம் தான்.

Also read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

எந்த அளவிற்கு சன் டிவியில் உள்ள எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே மாதிரி இந்த நாடகத்தில் கோபியின் கதாபாத்திரத்தை அனைவரும் ரசித்துப் பார்த்து வருகிறார்கள். அதனால் தான் என்னமோ குணசேகரன் மாதிரி இவரையும் வில்லன் ரேஞ்சுக்கு மாத்தி நாடகத்தை இன்னும் சூடு பிடிக்க வைக்க போகிறார்கள்.

ஆக மொத்தத்தில் இனி பாக்கியலட்சுமி தொடரின் பார்வையாளர்களுக்கு இன்னும் விறுவிறுப்பாக கதை அமையப் போகிறது. இதைத் தொடர்ந்து கோபியின் அம்மா காசி, ராமேஸ்வரம் என்று கிளம்பிவிட்டார். பிறகு பாக்கிய ஆசைப்பட்ட மாதிரி இந்த வீடு அவருடைய பெயரிலேயே ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணப் போகிறார்கள். இதற்கு பிறகு கோபியின் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது.

Also read: வெட்கம் கெட்டு திரியும் குணசேகரன்.. நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்

- Advertisement -

Trending News