சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஜான்சி ராணியை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை கூட்டும் ஜீ தமிழ்.. டபுள் மடங்கு சம்பளத்தை கொடுத்து இழுத்த சீரியல்

Serial Actress Jansi rani: பொதுவாக படங்களை பார்ப்பதை விட தினந்தோறும் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் சீரியல்களை ரசித்து பார்ப்பவர்கள் தான் அதிகம். அந்த வகையில் எத்தனையோ சேனல்கள் போட்டி போட்டு நாடகங்களை வெளியிட்டாலும் மக்கள் என்னவோ பார்த்து ரசிப்பது ஒரு சில சேனல்களை மட்டும் தான். அதில் எப்பொழுதுமே டாப்ல இருப்பது சன் டிவி தான்.

இந்த சேனலுக்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலைஞர் டிவி போன்ற சேனல்களும் நாடகங்களை வெளியிட்டு வருகிறது. ஆனாலும் சன் டிவி பக்கத்தில் யாராலும் நெருங்க முடியவில்லை. அதிலும் சமீபகாலமாக சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் வந்த பிறகு இவர்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை யாராலையும் தொடக்கூட முடியவில்லை.

Also read: கண்ணனை தண்டித்த நேரத்தில் பிறந்த குழந்தை.. மீண்டும் குவா சத்தம் கேட்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அதற்கு காரணம் அந்த சீரியல்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள். முக்கியமாக குணசேகரனின் நடிப்பு,அந்த வீட்டில் உள்ள மருமகள்களின் எதார்த்தமான பேச்சு, காமெடியாக பேசும் கரிகாலன் மற்றும் அடாவடித்தனம் பண்ணும் ஜான்சி ராணி இவர்களுக்காகத்தான் இந்த நாடகமே பார்க்கிறார்கள்.

அந்த வகையில் ஜான்சி ராணியை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க செய்யலாம் என்று ஜீ தமிழ் முயற்சி எடுத்திருக்கிறது. அதிலும் ஜான்சி ராணி ஏற்கனவே சொல்லியது என்னவென்றால் இந்த நாடகத்தில் நடித்த பிறகுதான் என்னுடைய மார்க்கெட்டை அதிகரித்து வருகிறது. அத்துடன் இதில் கிடைத்த பேரும் புகழும் தான் என்னை வளர வைக்கிறது.

Also read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

அதனால் இவருக்கு எதிர்நீச்சல் நாடகத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட டபுள் ஆக நாங்கள் தருகிறோம் என்று ஜீ தமிழ் சேனலில் இருந்து இவரை அவர்களின் நாடகத்திற்கு நடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள். அந்த நாடகத்திலும் இதே தோற்றத்துடன் கொஞ்சம் கெத்தாக வாயிலில் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு நல்ல மாமியாராக என்டரி கொடுக்கப் போகிறார்.

அதாவது ஜீ தமிழில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்ற அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் தீர்ப்பு சொல்ல வரும் அன்னலட்சுமியின் மாமியார் வேதநாயகியாக வருகிறார். இவர் வருகிறார் என்று தெரிந்ததுமே மக்கள் அனைவரும் இந்த நாடகத்தை பார்ப்பதற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை வைத்து ஜீ தமிழ் சேனல் எப்படியாவது டிஆர்பி ரேட்டிங்கை பிடித்திடலாம் என்று கணக்குப் போட்டு இருக்கிறது.

Also read: ஜீவானந்தத்தின் பிளானை நோட்டமிடும் கௌதம்.. நாலா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்

- Advertisement -

Trending News