வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கோபிக்கு தாத்தா கொடுத்த சவுக்கடி.. ஓவர் ஆட்டம் போடும் ராதிகா, வேடிக்கை பார்க்க போகும் பாக்யா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி அம்மாவை நினைத்து ரொம்பவே பீல் பண்ணி என்ன பண்ணுவது என்று தெரியாமல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த கோபியிடம் ராதிகா சண்டை போட்டு உங்களுக்கு உங்க அம்மா தான் முக்கியம் என்றால் ஏன் என்னை கல்யாணம் பண்ணினீர்கள். உங்க அம்மா கூடவே இருக்க வேண்டியதுதானே.

இவ்வளவு நடந்து பிறகும் எதுவுமே நடக்காத மாதிரி நீங்க பேசாம குடித்துவிட்டு வருகிறீர்கள் என்று ராதிகா கோபியை திட்டுகிறார். அப்பொழுது ராதிகாவின் அம்மா கோபி அம்மாவை திட்டி அசிங்கப்படுத்துகிறார். அதற்கு கோபி, போதும் அத்தை எங்க அம்மாவ ரொம்ப தான் நீங்க கொடுமைக்காரி மாதிரி பேசுறீங்க. அவங்க அப்படி எல்லாம் கிடையாது என்று கோபி ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

ரெண்டும் கெட்ட நிலைமையில் தவிக்கும் கோபி

இதை பார்த்ததும் ராதிகா இப்பொழுது கூட உங்க அம்மா தான் முக்கியம் அப்படித்தானே என்று கோபியிடம் சண்டை போடுகிறார். இனி என்னுடைய வாழ்க்கையை நான் தனியாகவே பார்த்துக் கொள்கிறேன். யாரை நம்பியும் நான் இருக்கப் போவதில்லை என்று கோபியிடம் சொல்லிவிட்டு போய்விடுகிறார். போகும் பொழுது ராதிகாவின் அம்மாவும் கோபியை திட்டி விட்டுப் போகிறார்.

ஆக மொத்தத்தில் நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று கோபி புலம்பிக்கொண்டே தூங்குகிறார். இதனை தொடர்ந்து மறுநாள் காலையில் கோபி வழக்கம் போல் நடை பயிற்சிக்கு போகிறார். அங்கே பாக்யா, மாமனாரை கூட்டிட்டு நடை பயிற்சிக்கு வருகிறார். வரும்போது சீக்கிரம் போக வேண்டும் ஒன்பது மணிக்கு கும்பகோணத்துக்கு போவதற்கு கார் வந்து விடும் என்று பாக்யா சொல்கிறார்.

இப்படி இருவரும் பேசிக்கொண்டு வரும் பொழுது கோபியும் அங்கே வந்து விடுகிறார். உடனே தாத்தா கோபியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி உங்க அம்மாவை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டியே என்று கண்ணா பின்னா என திட்டுகிறார். இதற்கு கோபி எதுவும் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போய் நின்று விடுகிறார். அடுத்து பாக்கியா வீட்டுக்கு போனதும் பெட்டி படுக்கையை எடுத்துவிட்டு மாமியார் மாமனார் இனியவை கூட்டிட்டு காரில் ஏறி கும்பகோணத்துக்கு போய்விடுகிறார்.

மேலும் கோபி வீட்டிற்கு வந்த நிலையில் ராதிகா வழக்கம் போல் ஆபிஸ்க்கு கிளம்புகிறார். அப்பொழுது கோபி அனுசரணையாக பேசுகிறார். ஆனால் ராதிகா எதற்கும் பேச தயாராக இல்லாத போல் கோபியை மறுபடியும் பேசி காயப்படுத்துகிறார். தொடர்ந்து கோபியிடம் சண்டை போட்டு ஓவராக ஆட்டம் போடுகிறார். இதற்கெல்லாம் காரணம் ராதிகாவின் அம்மா கூடவே இருந்து குழப்பி விடுவது தான் ராதிகா இந்த அளவுக்கு ஆடுகிறார்.

கடைசியில் கோபி மற்றும் ராதிகாவுக்கு விரிசல் வந்து பிரிய போகிறார்கள். இதை பாக்யா நின்னு வேடிக்கை பார்க்கும் அளவிற்கு காட்சிகள் அமையப் போகிறது. இதனை தொடர்ந்து மாமியாரின் மனதை மாற்ற கும்பகோணத்தில் பாக்யா சில ஏற்பாடுகளை பண்ணி ஈஸ்வரியை சந்தோஷப்படுத்த முயற்சி எடுக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News