வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பாக்யாவை காலி பண்ண நினைக்கும் திருட்டு கோபி.. எழிலிடம் கையும் களவுமாய் மாட்டிய ராதிகாவின் கணவர்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் இத்தனை நாளாக கோபியின் நடிப்பை ரசித்து வந்த ரசிகர்கள் தற்போது அவர் செய்து வரும் மட்டமான வேலையை சகிக்க முடியாமல் திட்டிக்கொண்டு வருகிறார்கள். அதாவது பாக்கியா தன்னைவிட எல்லா விஷயத்திலும் உயர்வாக வந்துவிட்டார்.

அதனால் இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று பாக்கியவை பழிவாங்க ஒவ்வொரு வேலையும் செய்து வருகிறார் கோபி. அந்த வகையில் பாக்கியா போலீஸ் இடம் லைசன்ஸ் இல்லாமல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் வீட்டில் இருப்பவர்களிடம் தகவலை கொடுக்கிறார்.

Also read: பாக்கியலட்சுமியில் சக்களத்தி சண்டை விட மோசமாக இருக்கும் போல.. எழிலின் தலையில் இடியை இறக்கிய அமிர்தா

அதே நேரத்தில் பழனிச்சாமிக்கும் போன் பண்ணி போலீசாரிடம் மாட்டிக் கொண்டோம் என்று சொல்கிறார். அதற்கு பழனிசாமி போலீசாரிடம் அவர்களின் லைசென்ஸை கொண்டுட்டு வருகிறேன். அதுவரை கொஞ்சம் பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பிறகு வீட்டில் இருக்கும் லைசென்ஸை எடுப்பதற்கு தாத்தா மற்றும் அமிர்தா போகிறார்கள்.

ஆனால் அங்கே போய் பார்த்தால் லைசன்ஸ் இல்லை. இதற்கு இடையில் பாக்யாவை இந்த விஷயத்தில் பழிவாங்கி இரண்டு நாளாவது போலீஸ் ஸ்டேஷனில் கஷ்டப்பட வைக்கணும்
என்று கோபி நினைத்தார். அதனால் குறுக்கு புத்தியை யோசித்து வீட்டில் யாரும் இல்லாத போது அவரிடம் இருந்த இன்னொரு சாவியை வைத்து பாக்யாவின் லைசென்ஸை திருடி விடுகிறார்.

Also read: பாக்கியலட்சுமி சங்கத்தமே வேண்டாம், ஓட்டம் பிடித்த மருமகள்.. ராதிகாவிற்கு டஃப் கொடுக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்

பிறகு திருடுன கையுடன் வெளியே வந்து லைசென்ஸை உடைத்து போட்டு விடுகிறார். இதனை எதார்த்தமாக பழனிச்சாமி பார்த்து லைசென்ஸை சரி செய்து போலீசாரிடம் கொடுத்து பாக்யாவை காப்பாற்றி விடுகிறார். அதன் பிறகு எழில், பழனிச்சாமிடம் எப்படி லைசென்ஸ் உங்களிடம் கிடைத்தது என்று கேட்கிறார். அதற்கு பழனிச்சாமி நான் உன்னிடம் ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஆனால் அதற்காக கோபப்பட்டு பிரச்சனை பண்ண கூடாது என்று கேட்கிறார்.

அதாவது இந்த லைசென்ஸ் எடுத்து உடைத்து போட்டது கோபி தான். அதை தான் நான் சரி செய்து போலீசாரிடம் காட்டினேன் என்று சொல்கிறார். உடனே எழில், ராதிகா வீட்டிற்கு போகிறார். அப்பொழுது கோபி, ராதிகாவிற்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். அந்த நேரத்தில் எழில் போனதும் கோபி பண்ண எல்லா தில்லு முல்லு வேலைகளையும் ராதிகாவிடம் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்டதும் ராதிகா கோபியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார்.

Also read: பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. கொஞ்ச நெஞ்ச டிஆர்பியும் போச்சு

- Advertisement -

Trending News