வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாக்கியலட்சுமி சங்கத்தமே வேண்டாம், ஓட்டம் பிடித்த மருமகள்.. ராதிகாவிற்கு டஃப் கொடுக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்

Baakiyalakshmi Serial: டிஆர்பி-யில் முன்னணி வகிக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில்  பாக்கியாவிற்கு மருமகளாக இருக்கும் அமிர்தா மற்றும் ஜெனி இருவருக்குமே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட சாஃப்ட் மருமகளாக இருக்கக்கூடிய ஒருவர் இப்போது மாமியார் பாக்கியாவிற்கு வில்லியாகவே மாறப் போகிறார்.

இனிவரும் நாட்களில் இவருடைய கதாபாத்திரம் பாக்யாவிற்கு எதிரியாக  நடிப்பது போன்றே இருப்பதால், அதற்கு இவருடைய முகபாவனை செட் ஆகாது என்பதால் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.  அவருக்கு பதில் வேறொரு நடிகை அந்த கேரக்டரில் நடிப்பதற்கு தேர்வாகி இருக்கிறார். இவ்வளவு நாள் பாக்யாவின் அன்பு மருமகளான அமிர்தா கேரக்டரில் நடிகை ரித்திகா நடித்துக் கொண்டிருந்தார்.

Also Read: பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கோபி.. வாண்டடாக பாக்கியாவிடம் அசிங்கப்பட்ட ராதிகா

இவரை திடீரென்று தற்போது சீரியலில் வில்லியாக நடிக்கும் ராதிகாவிற்கு டஃப்  கொடுக்கும் வகையில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என ரித்திகாவிடம் சொன்னதால், உங்களோட சங்கார்த்தமே வேண்டாம் என்று தற்போது சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

இவருக்கு பதில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை அக்ஷிதா அசோக் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். கடந்த சில மாதங்களாக பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பு குறைந்ததால் சீரியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அமிர்தா கேரக்டரை வில்லியாக காட்டி ரசிகர்களை கவரப்போகின்றனர்.

Also Read: டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. சற்றும் எதிர்பாராத மாற்றம்

அதற்காக இப்போது அமிர்தா கேரக்டரில் இருக்கும் ரித்திகாவையும்  மாற்றி அக்ஷிதா அசோக்கை  நடிக்க வைக்கப்போகின்றனர். ஏற்கனவே பாக்யாவின் தோழியாக இருந்த ராதிகா வில்லியாக மாறிய போது பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறியது.

அதேபோலவே அமிர்தாவும் மாறினால் நிச்சயம்  ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதாலே இப்படி ஒரு மாற்றத்தை செய்துள்ளனர். மேலும் அமிர்தா ராதிகாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டப் போகிறார். இதை பார்க்க ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. கொஞ்ச நெஞ்ச டிஆர்பியும் போச்சு

- Advertisement -

Trending News