ஜனவரி 31 என்றவுடன் நினைவுக்கு வரும் நான்கு விஷயங்கள்.. தலைவன் சிம்பு செய்த தரமான சம்பவம்

Simbu : இந்த வருடத்தின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் கடைசி நாளான இன்று சில விஷயங்கள் நினைவுக்கு வரும்படி கடந்த காலங்களில் ஜனவரி 31 நடந்த நிகழ்வுகளை இப்போது பார்க்கலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாகேஷ் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மரணித்தார். அவருடைய இழப்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிடத்தை கொடுத்தது.

அடுத்ததாக தலைவன் சிம்பு செய்தியாளர்கள் சந்திப்பில் டிசம்பர் 31ஆம் தேதி நியூ இயர் என்று சொல்வதற்கு பதிலாக ஜனவரி 31 தான் நியூ இயர் என்று தவறுதலாக கூறிவிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியது. ஆகையால் ஜனவரி 31 என்றாலே சிம்பு தான் முதலில் ஞாபகத்திற்கு வருவார்.

மேலும் கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 இந்தியாவிலேயே முதல்முறையாக அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக திமுக ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அரசியல் களத்தில் அப்போது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

Also Read : தொட்டதெல்லாம் துலங்காமல் அவஸ்தை பட்டு வரும் சிம்பு.. படத்திலும் ரியலிலும் ஜீரோவான STR

அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு திமுக மகத்தான வெற்றி பெற்ற மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதுவும் பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராகி அரியணை ஏறினார். இப்போது மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்தார். மேலும் திமுக ஆட்சியில் மிக மிக பரபரப்பை ஜனவரி 31 ஏற்படுத்தி இருந்தது.

இதை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடற்கரையில் பேனா நினைவு சின்னம் வைக்க முடிவெடுத்திருந்தனர். அப்போது கருத்து கேட்கும் கூட்டத்தில் சீமான் இதற்கு எதிராக கடுமையாக பேசி இருந்தார். அந்த நிகழ்வும் ஜனவரி 31ஆம் தேதி நடந்த நிலையில் சீமானின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also Read : கனத்த இதயத்தோட வந்த சிம்பு.. பவதாரணி மரணத்துக்கு இரங்கல் கூட தெரிவிக்காத அரக்க மனம் படைத்த ஹீரோக்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்