ஜிவி பிரகாஷ், தனுஷ் வரிசையில் விவாகரத்துக்கு ரெடியான ஹீரோ.. தந்தை சொல் தட்டாத நடிகருக்கு வந்த சங்கடம்

Actor Divorce: தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வலம் வந்த அந்த நடுத்தர வரிசையில் இருக்கும் பெரிய ஹீரோ இல்லற வாழ்க்கையில் ஏற்பட்டது பிரச்சனை. சமீப காலமாக ஹீரோவுக்கு எந்த படமும் ஓடவில்லை. தொடர்ந்து நடித்தாலும் எல்லாம் ஃபெயிலியராகவே அமைந்தது.

எந்த ஒரு பிரச்சனையும் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே இதுவரை புகைச்சல் இருந்து வந்திருக்கிறது. வீட்டிற்குள் இருக்கும் பிரச்சனையால் வெளியில் நடிகருக்கு எதுவும் கைகூடி வரவில்லை. நாலா பக்கமும் பிரச்சனைகளாகவே சூழ்ந்து வந்தது.

குடும்ப வாழ்க்கை சரியில்லாத காரணத்தால் வெளியில் இருக்கும் தொழில் வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் நீதிமன்ற நடைமுறைகளை கையாளத் தொடங்கியுள்ளனர். கூடிய விரைவில் இந்த விவாகரத்து பற்றிய அறிவிப்பு வெளியில் வரும்

சமீபத்தில் தான் ஜிவி பிரகாஷ் தனது காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்துள்ளார். இவர்களுக்கு முன்னரே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது லிஸ்டில் இந்த ஹீரோவும் சேர்ந்துள்ளார்.

தந்தை சொல் தட்டாத நடிகருக்கு வந்த சங்கடம்

அப்பா பேச்சை தட்டாமலும், மாமியார் சொல்பேச்சு கேட்டு நடக்கும் மாப்பிள்ளையாகவும் இருந்து வந்த ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமை. சமீபகாலமாக எந்த படங்களும் கை கொடுக்காததால், மனைவியின் அம்மா தான் பல படங்கள் நடிக்க உதவி செய்தார்.

இப்பொழுது அந்த நடிகரின் இல்லற வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. முதல் படமே வெற்றியில் ஆரம்பித்த அந்த ஹீரோவிற்கு இப்பொழுது ஆகப் போகிறது விவாகரத்து. ஆரம்பத்திலிருந்து சினிமாவில் ஊறி வளர்ந்த தந்தை எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் கணவன் மனைவி இருவரும் கேட்பதாக இல்லை

Next Story

- Advertisement -