தனுஷ் மீது பாய்ந்த வழக்கு.. போயஸ் கார்டன் மோகத்தால் தடுமாறிய ராயன்

Dhanush: பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள். இந்த பழமொழி இப்போது தனுஷ் வீட்டிற்கு சரியாக பொருந்தி விட்டது. தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் இடையே விவாகரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே தனுஷ் ரொம்பவும் சைலன்ட் ஆக தான் இருக்கிறார்.

ஆனால் மாசம் ஒரு கண்டன்டு அவரை தேடி வந்து விடுகிறது. அதிலும் சமீபத்தில் பாடகி சுசித்ரா கொடுத்த செய்தி எல்லாம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலகத்தையுமே ஆட்டி வைத்தது என்று சொல்லலாம். அந்த பிரச்சனையை மக்கள் மறப்பதற்குள் தனுஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து இருக்கிறார்கள்.

போயஸ் கார்டன் மோகத்தால் தடுமாறிய ராயன்

தனுஷ் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக ஒரு வீடு கட்டி இருக்கிறார் என தெரியும். ஆனால் அந்த வீட்டில் தனுஷ் மற்றும் அவருடைய மகன்கள் அவ்வப்போது வந்து விட்டுப் போவது மட்டும் தான் நிரந்தரமாக யாரும் தங்கவில்லை.

அதற்குள் அதே ஏரியாவில் இன்னொரு வீட்டை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் லீஸ் அக்ரீமெண்டில் வசித்து வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டை விற்கும் போதே அந்த ஓனர் அக்ரிமெண்ட் ஜனவரி மாதம் தான் முடிகிறது அப்போதுதான் வீட்டில் இருப்பவர்கள் காலி செய்வார்கள் என தெரிவித்திருக்கிறார்.

எல்லாம் தெரிந்து வீட்டை வாங்கிவிட்டு தனுஷ் பெரிய வேலையை பார்த்து இருக்கிறார். அக்ரிமெண்ட் முடிவதற்கு முன்பே அந்த வீட்டில் இருப்பவர்களை காலி பண்ண திட்டமிட்டு இருக்கிறார். தனுஷ் பெயரை சொல்லி சில ஆட்கள் தங்களை வந்து மிரட்டுவதாக அந்த குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டார்கள்.

விஷயம் பெருசானதும் அந்த குடும்பத்தினரை அழைத்து சமரசம் பேசி விட்டார் தனுஷ் என்ன தான் சமரசம் பேசினாலும் தனுஷ் போன்று இமேஜ் இருக்கும் நடிகர்கள் இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பது ரொம்பவே நல்லது.

மக்கள் மனதில் இவர்களைப் பற்றி தவறான எண்ணம் வந்துவிட்டால் அதன் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவது தான் நல்லது. ஏற்கனவே போயஸ் கார்டனில் அரண்மனை போல் வீடு கட்டி இருக்கும் தனுஷ், எதற்காக இந்த வீட்டை விலை கொடுத்து வாங்கி அதோடு சேர்த்து வம்பையும் வாங்கினார் என தெரியவில்லை.

சந்தி சிரிச்ச தனுஷின் சொந்த வாழ்க்கை

Next Story

- Advertisement -