GV Prakah: தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம்.. கொந்தளித்து காட்டமாக ஜிவி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை

GV Prakash: ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக நேற்று சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இதற்கான காரணம் என்ன என அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதையடுத்து ஜிவி பிரகாஷ் மீதுதான் தவறு. அவருக்கு சில நடிகைகளுடன் நட்பு இருக்கிறது. அது தான் குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பி விட்டது என்றெல்லாம் செய்திகள் கசிந்தது.

மேலும் யூட்யூப் சேனல்களிலும் இது குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. இதனால் பொறுத்து பார்த்த ஜிவி பிரகாஷ் தற்போது நீண்ட பதிவு ஒன்றை சோசியல் மீடியா தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை

gv prakash
gv prakash

அதில் அவர் இந்த விவாகரத்து விஷயத்தில் நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் கலந்து பேசி தான் முடிவு எடுத்தோம். உண்மையான தகவல் என்ன என்று தெரியாமல் யாரும் செய்திகளை வெளியிட வேண்டாம்.

அதேபோல் உண்மைக்கு புறம்பாக தரம் தாழ்ந்த கருத்துக்களையும் பதிவிட வேண்டாம். எங்களை பிரபலமாக்கிய உரிமையோ அல்லது எங்கள் தனிப்பட்ட வாழ்வின் மேல் இருக்கும் அன்பிலோ ஆதங்கத்துடன் கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

ஆனால் அது சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்துகிறது. இதுதான் தமிழர் மாண்பா? என கேள்வி எழுப்பியுள்ளார் மேலும் தனிமனிதரின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

- Advertisement -