பிக் பாஸ் சீசன்-5ல் பங்கேற்க தயாராகிவிட்ட பிரபல சீரியல் நடிகை! அனல் பறக்கும் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அதன் விளைவாகவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதற்கான பணிகளில் விஜய் டிவி நிர்வாகம் முன்புறமாக செயல்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிவடைந்தது.

அதேபோல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பு செய்வதாக திட்டமிட்டுள்ளதால், போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை விஜய் டிவி தேர்வு செய்து வருகிறது. சீசன் 5ல் ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ளப் போவதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. அதேபோல் பிரபல சீரியல் நடிகை பவானி ரெட்டியும் இந்த சீசனில் பங்கேற்க உள்ளாராம்.

ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமான பவானி ரெட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘இனி அவனே’ என்ற படத்தில் ஆபாச காட்சியில் நடித்த பவானி ரெட்டியின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பவானி ரெட்டி தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகரான பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஒரு வருடத்திற்கு உள்ளேயே பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பவானி ரெட்டி தன்னுடைய உறவினர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்ற தகவல்களும் சமீபத்தில் வெளியானது.

pavani-reddy-cinemapettai-1
pavani-reddy-cinemapettai-1

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பவானி ரெட்டி பங்கேற்க விஜய் டிவி அவரை அணுகி உள்ளதாகவும், அதற்கு பவானி ரெட்டி ஒப்புதல் தெரிவித்ததாகவும் தற்போது தகவல்கள் கசிந்து வருகிறது. ஏற்கனவே இந்த சீசனை தொகுத்து வழங்கும் கமலஹாசனை வைத்து புரோமோஷன் வீடியோவை உருவாக்கினார்கள்.

அந்த வீடியோவும் இன்னும் ஒருசில தினங்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. எனவே இந்த சீசனில் யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் பிக்பாஸ் ரசிகர்கள் காத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்