வாரிசுகளின் எண்ட்ரிக்குப் பிறகு செல்வாக்கை இழந்த 5 நடிகர்கள்.. சினிமாவை அடியோடு மறந்த கார்த்திக்

Popular heroes-sons: சினிமாவில் ஒரு காலத்தில் பேரோடும், புகழோடும் கதாநாயகனாக வளம் வந்த சில நடிகர்கள், தற்போது அந்த செல்வாக்கை இழந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் வாரிசுகள்தான். பிள்ளைகள் நடிக்க துவங்கியதும் அப்பாக்களின் படத்திற்கு போதிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. பிள்ளைகளுக்காலே அப்பாக்களை ஓவர் டெக் செய்து விட்டனர்.அப்படி பிள்ளைகள் வந்த பிறகு அப்பாக்களின் படம் ஓடாமல் போன நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

காளிதாஸ்-ஜெயராம்: ஆழ்வார்க்கடியான் நம்பி எனும் கதாபாத்திரத்தில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தவர் தான் ஜெயராம். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவரின் நடிப்பினால் பல விருதுகளை குவித்துள்ளார். இவரின் மகன் தான் காளிதாஸ் ஜெயராம். இவரும் மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கமல்ஹாசன் உடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்துள்ளார் . தற்போது இந்தியன் 2 திரைப்படத்திலும் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இவரின் வருகைக்குப் பிறகு இவரின் தந்தை ஜெயராமுக்கு திரைப்படங்கள் அதிக அளவு ஓடவில்லை.

Also Read:ரஜினியை குருவாக ஏற்று ஆன்மீகவாதிகளாக மாறிய 5 நடிகர்கள்.. தலைவரை மிஞ்சிய தொண்டன்

துல்கர் சல்மான்-மம்முட்டி: மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மம்முட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். என்னதான் துல்கர் அப்பா அளவிற்கு படங்கள் நடிக்கவில்லை என்றாலும் கூட, அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு தற்போது கிடைத்துள்ளது. துல்கர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். அவரின் அப்பாவிற்கு பிறகு இவரின் செல்வாக்கே கை ஓங்கத் தொடங்கியது.

ராம்சரண்-சிரஞ்சீவி: தெலுங்கு திரையுலகின் சிறந்த நடிகர், இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர் தான் சிரஞ்சீவி. இவர் நடித்து வெளியான திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றியை தேடி தந்தது. இவரின் மகன் தான் ராம் சரண், இவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களிலே அதிகம் நடிப்பார். இவர் நடித்த மகதீரா என்னும் தெலுங்கு திரைப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. அதில் இவருடைய நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து விட்டார். இவரின் வருகைக்குப் பிறகு தந்தைக்கு அந்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

Also Read:பழக்க வழக்கெல்லாம் புறவாசலோட போயிரணும்.. தம்பியை தவிர மற்ற இயக்குனர்களை மதிக்காத விஜய்

விக்ரம் பிரபு – பிரபு: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருந்தவர் தான் பிரபு. தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மகன்தான் விக்ரம் பிரபு. “கும்கி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று, இரண்டிலும் நடித்துள்ளார். இவர் நடிக்க தொடங்கிய தொடங்கியவுடன் இவரின் அப்பாவின் செல்வாக்கு பெரிதாக எடுபடவில்லை.

கௌதம் கார்த்திக்-கார்த்திக்: 80- 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் தான் கார்த்திக். இவரின் தந்தை தான் முத்துராமன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “அலைகள் ஓய்வதில்லை” என்னும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகர் விருது வென்றார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஏராளமான படங்கள் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனதால், இவர் சினிமாவை வெறுத்து விட்டார். இவரின் மகன் தான் கௌதம் கார்த்திக், கடல் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தன. என்னதான் இவர் நடித்தாலும் இவரின் அப்பா அளவிற்கு இவருக்கு ரீச் கிடைக்கவில்லை. இருந்தாலும் இவரின் வருகைக்குப் பிறகு அப்பா நடிப்பில் வெளியாகும் படம் அந்த அளவுக்கு வரவேற்பு போனது.

Also Read:ரஜினி விட்ட சாபத்தால் நெருப்பில் நிற்கும் தனுஷ்.. மாளிகையில் இருந்தும் நிம்மதி இல்லாத வாழ்க்கை என புலம்பல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்