புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தளபதி கூட்டணியில் இணைந்துள்ள எதிர்நீச்சல் மருமகள்.. வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்

Venkatprabhu-Vijay-Ethirneechal : வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது விஜய் நடிப்பில் GOAT படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா போன்ற நடிகைகள் நடிக்கும் நிலையில் எதிர்நீச்சல் தொடரின் மருமகளும் இப்போது என்ட்ரி கொடுத்திருக்கிறார். சன் டிவியின் டிஆர்பி கிங்காக இருக்கும் தொடர் தான் எதிர்நீச்சல்.

இதில் நான்கு மருமகளுக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை சீரியலுக்கு பலமாக அமைந்தது. மேலும் இந்த தொடரின் மூலம் இப்போது எதிர்நீச்சல் மருமகள்களுக்கு சீரியல் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. ஆதி குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கனிகா.

ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்த இவர் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார். அஜித்துக்கு ஜோடியாக வரலாறு படத்தில் கனிகா நடித்திருப்பார். விஜய்யுடன் கனிகா GOAT படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது படம் வெளியானால் தான் தெரியவரும்.

Also Read : குணசேகரனுக்கு எமனாக நிற்கப்போகும் கதிர்.. என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம், தலைகீழாக மாறும் எதிர்நீச்சல்

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கனிகா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் மாடல் உடையில் கனிகா இருக்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு இது நம்ம ஈஸ்வரியா என ரசிகர்கள் வாயை பிளக்கின்றனர்.

மேலும் சீரியலில் இருந்து பலருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து தான் வருகிறது. ஆனால் சினிமாவில் வாய்ப்பில்லை என்று சின்னத்திரைக்கு வந்த ஈஸ்வரிக்கு எதிர்நீச்சல் தொடர் மூலம் இப்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. GOAT படத்தை தொடர்ந்து இன்னும் சில படங்களிலும் கனிகா நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபுவுடன் கனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம்

kanika-venkat-prabhu
kanika-venkat-prabhu

Also Read : எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த சோதனை.. கிடப்பில் போடப்பட்ட 7 விஷயங்கள்

- Advertisement -

Trending News