எடுத்த 2 வெற்றி படங்களோடு காணாமல் போன டைரக்டர்.. ஜெய் கேரியரில் கிடைத்த ஒரே ஒரு ஹிட்!

Engeyuym Eppothum movie director saravanan who gave only 2 hit films: முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற நம்பிக்கை தரும் வாசகங்கள் இருந்த போதும், திறமை, தகுதியோடு என்னதான் போட்டி போட்டாலும் மனித வாழ்க்கையே காலத்தின் கையில் உள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

தமிழ் சினிமாவில் தனக்குரிய ஸ்பெஷல் உடல் மொழியின் மூலம் தனித்துவம் பெற்ற நடிகர் தான் ஜெய். முதலில் தளபதி நடித்த பகவதி திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக  நடித்திருந்தார்.

சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் ஜெய். இருந்த போதும் ஒரு தனி ஒரு நாயகனாக தரமான ஹிட்க்கு காத்திருந்தவர்க்கு கிடைத்தது தான்  எங்கேயும் எப்போதும் திரைப்படம்.

அஞ்சலி மீதான காதலால், அப்பாவி இளைஞனாக குடும்பத்திற்காக வேலை செய்யும் ஜெய், காதலை இயல்பாக வெளிப்படுத்தி பலத்த கரகோஷத்தை பெற்றிருந்தார்.

ஜெய்யின் திரை வாழ்க்கையில்  திருப்பத்தை கொடுத்த திரைப்படம் “எங்கேயும் எப்போதும்”. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரவணன்.

இதற்குப் பின் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி என்ற வித்தியாசமான ஆக்சன் மூவி ஒன்றை இயக்கியிருந்தார். 

Engeyuym Eppothum movie director saravanan, Jai and anjali

மீண்டும் ஜெய்யின் கூட்டணியில்  உருவான வலியவன் திரைப்படத்தினால் வலிமை இழந்து போனார் சரவணன். படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இதன்பின் ஏற்பட்ட சாலை விபத்தினால் சில காலங்கள் திரைத்துறையை விட்டு விலகி இருந்த சரவணன் கடந்த ஆண்டு பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடிப்பில் வெளியான நாடு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காட்டில் வாழும் மக்களை மையப்படுத்தி முற்றிலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட “நாடு” திரைப்படத்தில் தர்ஷன் மற்றும் மகிமா நம்பியார் நடித்திருந்தனர்.  சில நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்த போதும் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாமல் பின்னோக்கி சென்றது இந்த நாடு.

சரவணன்  இயக்கத்தில் திரிஷா ஆக்சன் ஹீரோயின் ஆக உருவான ராங்கி திரைப்படம்

லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில் முன்னணி நடிகை ஆன திரிஷாவின் கூட்டணியில் ராங்கி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் சரவணன். 

ஏ.ஆர். முருகதாஸின் திரைக்கதையின் தரமான இயக்கத்தில் திரிஷாவை ஆக்சன் ஹீரோயின் ஆக செதுக்கி இருந்தார் என்றே கூறலாம்.

இயக்கத்தில் தன்னிச்சையாக ஜொலித்த போதும் தாமதமான ரிலீஸ் மற்றும் சந்தர்ப்ப  சூழ்நிலைகளின் வஞ்சகத்தால் முன்னேற முடியாமல் இரண்டு வெற்றி படங்களை மட்டும் கொடுத்துவிட்டு காணாமல் போனார் சரவணன். 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்