Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா செய்த உருப்படியான விஷயம் ரோகிணியை ஆட்டிப்படைப்பது தான். ஏதோ உண்மையிலேயே பணக்கார வீட்டு பொண்ணு மாதிரி விஜயா வீட்டில் சொகுசாக வாழ்ந்து வந்த ரோகினி இப்பொழுதுதான் ஒவ்வொரு கஷ்டங்களை அனுபவிக்கிறார்.
தனக்கு வேண்டிய சாப்பாடு செய்து கொள்ள வேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டு வாசல் முன் கோலம் போட வேண்டும். பத்திய சாப்பாடு தான் சாப்பிடணும், வெளி சாப்பாடு சாப்பிட கூடாது போன்ற சில கட்டுப்பாடுகளை போட்டு 45 நாட்களுக்கு நேர்த்திக்கடனை பண்ண வேண்டும் என்று விஜயா சொல்லிவிட்டார்.
அதன்படி ஒவ்வொரு நாளும் ரோகிணி, விஜயாவிடம் மாட்டிக் கொண்டு அல்லோளபட்டு வருகிறார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் ரோகிணி செய்த தில்லுமுல்லு எதுவும் வெளிவராமல் கமுக்கமாக இருக்கிறது.
எஸ்கேப் ஆகிய டோரா புஜ்ஜி
இதனை தொடர்ந்து வீட்டில் சரியாக சாப்பிட முடியாமல் ரோகிணி பார்லருக்கு போய்விட்டார். பிறகு முத்துவுக்கு டோரா புஜ்ஜி இடமிருந்து போன் வருகிறது. இன்றைக்கு இரண்டு மூன்று இடத்திற்கு போக வேண்டியது இருக்கு. நீங்கள் இப்பொழுது வருகிறீர்களா என்று முத்துவை கூப்பிடுகிறார். உடனே முத்துவும், டோரா புஜ்ஜி மாதிரி இருக்கும் ஜீவாவை அழைத்துக் கொண்டு ஏஜென்ட் ஆபீஸ்க்கு போகிறார்.
அங்கே திருப்பி கனடாவுக்கு போவதற்கு டிக்கெட் விஷயமாக ஜீவா விசாரிக்கிறார். போன இடத்தில் உங்களை இரண்டு பேர் வந்து விசாரித்துவிட்டு போனதாக அங்கு இருப்பவர் சொல்கிறார். உடனே மனோஜ் என்ற பெயர் சொன்னதும் ஜீவா அதிர்ச்சி ஆகிவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து கிளம்ப வேண்டும் என்று ஜீவா முடிவெடுத்துவிட்டார்.
பிறகு முத்துவை கூட்டிட்டு பார்லருக்கு போகிறார். அதுவும் ரோகினி வைத்திருக்கும் பார்லருக்கு தான் முத்து கூட்டிட்டு போகிறார். இதற்கிடையில் ரோகிணி, மனோஜ்க்கு போன் பண்ணி உடனே நீ பார்லருக்கு வா என்று கூப்பிடுகிறார். அப்பொழுது அங்கே போன மனோஜ் மேக்கப் பண்ணுவதற்காக இருக்கும் டோரா புஜ்ஜியை பார்த்துவிடுகிறார்.
ஆனால் ஜீவா, டோரா புஜ்ஜி மாதிரி கெட்டப்பில் இருப்பதால் மக்கு மனோஜ் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை ரோகிணி செய்த பரிகாரத்தால் ஜீவா மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால் ஜீவா, மனோஜை பார்த்ததும் உடனே அங்கிருந்து கிளம்பி முத்து மூலம் எஸ்கேப் ஆகி விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
பிறகு கையில் இருக்கும் வெண்ணையை தொலைத்து விட்டு நெய்க்கு அலைந்த கதையாக ரோகினி மற்றும் மனோஜ் மறுபடியும் ஜீவாவை தேடிக்கொண்டு சுற்றப் போகிறார்கள்.