எங்கிட்டயே உன் வேலையை காட்டுறியா.. வால்ட்டர் விஷாலை கதற கதறவிட்ட பாலா

நடிகர், தயாரிப்பாளர் என்று கெத்து காட்டி வரும் விஷால் எப்போதுமே சர்ச்சை என்ற வட்டத்திற்குள் தான் இருப்பார். சமீப காலமாக இவர் எந்த படம் நடித்தாலும் அதில் ஏதாவது ஒரு ஏழரையை கூட்டி விடுகிறார். குறிப்பிட்ட தேதியில் சூட்டிங் வராமல் இருப்பது போன்று பல பிரச்சனைகளை இவர் கொடுத்து வருகிறார். அதனாலேயே இவரை வைத்து படம் எடுக்க பலரும் தயங்கி வருகின்றனர்.

அப்படிப்பட்ட இவரையே பாலா கதறவிட்டுள்ளார். நிச்சயம் இதை யாராலும் நம்ப முடியாது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன் நடந்திருக்கிறது. அதாவது விஷால், பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஷால் மாறு கண் கொண்டவராக நடித்திருப்பார். அவருடன் இணைந்து ஆர்யா, மதுஷாலினி, ஜனனி ஐயர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Also Read : சூப்பர் ஹிட் டைரக்டருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. தொடர்ந்து அலைக்கழிக்கும் விஷால், கார்த்தி, ஜெயம் ரவி

இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பாக விஷால் தன் நண்பன் ஆர்யாவிடம் எனக்கும் பாலாவின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். உடனே ஆர்யாவும் பாலாவிடம் இது பற்றி தெரிவித்துள்ளார். அதற்கு பாலா விஷாலை வரச் சொல்லும்படி கூறியிருக்கிறார். அப்போது அவரை காண வந்த விஷால் கொஞ்சம் பந்தா செய்திருக்கிறார்.

எப்படி என்றால் ஒரு அசிஸ்டன்ட்டை வைத்து தனக்கு குடை பிடிக்க வைத்துக் கொண்டு கூலிங் கிளாஸ், காதில் ஹெட்செட் என்று அலப்பறையுடன் வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அசிஸ்டன்ட் கையில் தண்ணீர் பாட்டில், கூல்ட்ரிங்க்ஸ் என சகலமும் இருந்திருக்கிறது. இதை பார்த்து கடுப்பான பாலா எப்போதும் இப்படித்தான் சுற்றிக் கொண்டிருப்பாயா என்று கேட்டிருக்கிறார். உடனே பின்புறம் நின்று கொண்டிருந்த ஆர்யா குடை வேண்டாம் என்று சைகை செய்து இருக்கிறார்.

Also Read : பாலாவை போல காய் நகர்த்தும் மற்றொரு இயக்குனர்.. நாசுக்காக வெளியில் தெரியாமல் செய்யும் வேலை

அப்போதுதான் விஷாலுக்கு, பாலா எப்படிப்பட்டவர் என்று தெரிந்திருக்கிறது. அதன் பின்னர் அவரும் எந்த பந்தாவும் இல்லாமல் பேசியிருக்கிறார். ஆனால் இதை மனதில் வைத்துக் கொண்டு பாலா அவரை படாத பாடு படுத்தி இருக்கிறார். அதாவது அவரை வெறும் ட்ராயருடன் குப்பை மேட்டில் படுக்க சொல்லிவிட்டு மற்ற நடிகர்களின் காட்சிகளை படமாக்கி இருக்கிறார்.

இப்படியே ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்திருக்கிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட விஷால் பாலாவிடம் நேராக சென்று எதற்கு சார் இப்படி செய்கிறீர்கள் என்று கண்ணீருடன் கேட்டிருக்கிறார். அப்போது பாலா என்னிடம் தேவையில்லாத பந்தாவெல்லாம் காட்டக்கூடாது. சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தோமா சொன்னதை நடித்தோமா என இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அதன் பிறகு தான் அவருக்கு அந்த மாறு கண் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்காக விஷால் கடுமையாக பயிற்சி செய்து நடித்திருக்கிறார். அதனால் அவருடைய நரம்பு மண்டலமே கூட பாதிக்கப்பட்டதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இப்போதும் கூட அவரால் அந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர முடியவில்லையாம். அந்த அளவுக்கு பாலா கொடூரமான ஒரு இயக்குனராக இருந்திருக்கிறார்.

Also Read : கசாப்புக்கடை ஆடு போல் மாட்டிக்கொண்ட அதர்வா.. சுத்தப் பொய், புருடாக்களை அள்ளிவிடும் பாலா

- Advertisement -spot_img

Trending News