புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பேரன், பேத்தி எடுத்த வயசுல உங்களுக்கு இதெல்லாம் தேவையா கோபி.. பாக்யாவுக்கு சங்கு ஊதிய ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இது என்னடா பாக்கியாவுக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப கதை மட்டமாக இருக்கிறது. பாக்கியாவிற்கு எப்படியாவது இரண்டாவது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று ஒரு பக்கம் எழில் முயற்சி எடுத்து வருகிறார்.

இன்னொரு பக்கம் எழிலுக்கும் அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று பாக்யாவின் மாமியார் ஆசைப்பட்டு வருகிறார். அதே மாதிரி பாக்கியாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பழனிச்சாமி காதல் வலையில் விழுந்து ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்.

அத்துடன் இனியாவும் புதுசாக வந்த பழனிச்சாமி சகோதரியின் மகன் மீது காதலில் விழுந்து விட்டார். இப்படி இவர்களுடைய கதை ஒரு பக்கம் போனாலும், கோபி யாரு எப்படி எக்கேடும் கெட்டு போனாலும் பரவாயில்லை தன் சந்தோசம் தான் முக்கியம் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்.

வெட்கம் மானமே இல்லாமல் ஆட்டம் போடும் கோபி

அதாவது இவ்வளவு பிரச்சனைகளுக்கும் நடுவில் கோபி, ராதிகாவை கர்ப்பம் ஆக்கிவிட்டார். ஆரம்பத்தில் ராதிகா எடுத்த வாந்தி சாப்பாடு பிரச்சனையால் இருக்கும் என்று எதிர்பார்த்தால் ராதிகா டெஸ்ட் பண்ணி கர்ப்பம் என்பதை உறுதி செய்து விட்டார்.

அதை வீட்டில் வந்து கோபியிடம் சொல்லும் பொழுது கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் ராதிகாவை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். பிறகு ராதிகா, கோபி நான் அம்மாவாக போகிறேன் என்றால் அது அசிங்கமாக இருக்கும் என்று சொன்னதும் தான் கோபிக்கு புத்தி தெளிந்தது.

தாத்தா ஆன பின் அப்பாவான கொடுமை

bhakkiyalakshmi
bhakkiyalakshmi

பேரன் பேத்தி எடுத்த வயசுல கோபிக்கு இதெல்லாம் தேவையா. பாவம் இதெல்லாம் ஒன்னும் தெரியாமல் அசடு மாதிரி பாக்கியா சுற்றி வருகிறார். கடைசியில் பாக்யாவுக்கு பெரிய சங்கை ராதிகா ஊதி விட்டார். இன்னும் என்னெல்லாம் அக்கப்போர் இந்த நாடகத்தில் நடக்கப் போகிறதோ.

இதை வைத்தே பாக்கியாவுக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணத்தை வைத்து விடுவார்களோ என்னமோ. பிறகு ஒரே மேடையில் அம்மா பாக்யாவுக்கும் மகள் இனியாவுக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்க போகிறார்கள். ஆரம்பத்தில் பாக்கியலட்சுமி சீரியல் வந்ததும் குடும்ப இல்லத்தரசிகள் அனைவரும் பார்த்து மகிழும்படியாக இருந்தது.

ஆனால் தற்போது இந்த நாடகத்தை யாரும் பார்க்கவே முடியாது. தடை செய்யுங்கள் என்று சொல்லும் அளவிற்கு கதை மட்டமாக அமைந்து வருகிறது.

- Advertisement -

Trending News