டாப் ஹீரோஸ் மட்டும் இல்ல தல தோனியும் கொடுத்த ராஜ மரியாதை..  அம்பானி கல்யாணத்தில் பட்டையை கிளப்பிய நம்ம இயக்குனர்

Dhoni and Atlee met at Ambani house wedding: இந்தியாவின் முன்னிலை வகிக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல முன்னணி நட்சத்திரங்களும் கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற  பிரபலங்களும்  கலந்து கொண்டுதம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

இயக்குனர் அட்லி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக்கான் இணைந்த ஜவான் படத்தின் வெற்றி பாலிவுட் திரை உலகையே திரும்பி பார்க்க செய்தது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் அட்லீயின் இயக்கத்தில் இணைந்து விட மாட்டோமா என தவம் கிடக்கும் அளவுக்கு புகழ்பெற்றுள்ளார் அட்லி. 

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் அட்லீக்கு அழைப்பு வரவே மனைவி பிரியா மற்றும் மகனுடன் கலந்து கொண்டார் அட்லீ. முதன் முறையாக மீடியா வெளிச்சத்திற்கு தன் மகனை அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர். 

Also read: ஜெராக்ஸ் காப்பி போல் எடுக்கப்பட்ட 5 படங்கள்.. அட்லீக்கு முன்பே வேலையை காட்டிய இயக்குனர்

குஜராத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் அட்லீயும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான நம்ம தல மகேந்திர சிங் தோனியும் சந்தித்துக்கொண்டது இரு ஜாம்பவான்களின் ரசிகர்களையும் மகிழ்ச்சியில்ஆழ்த்தியுள்ளது. 

அது மட்டும் இன்றி நம்ம தல தோனி, அட்லீயும் ஜவான் மூவி வெற்றிக்காக அவரை கட்டி அணைத்து  வாழ்த்து தெரிவித்தார். இதனைஅடுத்து தோனி சாக்ஷி ஜோடியும் அட்லீ மற்றும் பிரியா ஜோடியும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் ஜவான் படத்தின் மூலம் அட்லீக்கு ராஜ மரியாதை கிடைத்து வருகிறது. பாலிவுட்டில் செம மாஸ் காட்டி வருகிறார் நமது இயக்குனர் அட்லீ. 

Also read: அடுத்த பயோபிக் படத்திற்கு ரெடியான ரஜினி மகள்.. தோனி பட வெற்றியால் ஐஸ்வர்யாவின் பேராசை

- Advertisement -spot_img

Trending News