வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தர்மம் தான் கடைசியில் ஜெயிக்கும்.. பிக் பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் ஏடிகே இல்லையாம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியே போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆரம்பத்தில் ஏடிகே குறைந்த வாக்குகள் பெற்ற நிலையில் அவர்தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்றைய எபிசோடில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ஒரு போட்டியாளர் இந்த வாரம் வெளியேற உள்ளார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். மக்களின் பேராதரவால் இவர்கள் இருவரும் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் பயணிக்க உள்ளார்.

Also Read : பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் நடக்கும் சாதிய அடக்குமுறை.. கண்டுகொள்ளாமல் இருக்கும் கமல்

இந்நிலையில் ரக்ஷிதாவும் காப்பாற்றப்பட்ட நிலையில் மணிகண்டன், ஏடிகே, ஜனனி ஆகியோர் இறுதியில் உள்ளனர். மேலும் ஏடிகே கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட நிலை ஜனனி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதற்கு காரணம் நேற்றைய எபிசோடில் விக்ரமன் வெற்றி பெற்ற நிலையில் தான் வெற்றி பெற்றேன் என அடுத்த வார நாமினேஷன் ஃப்ரீ ஜோன் ஆனார்.

தர்மம் கண்டிப்பாக வெல்லும் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. கடைசி நேரத்தில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்ததால் ஜனனியை மக்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஜனனி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தவர்களை புறம் பேசி வருகிறார்.

Also Read : பிக் பாஸ் வீட்டில் விக்ரமனுக்கு நடக்கும் அநீதி.. தட்டிக் கேட்பாரா ஆண்டவர்

மேலும் அமுதவாணன் தொடர்ந்து ஜனனிக்கு ஆதரவு அளித்து வந்தார். தொடர்ந்து ஜனனியை ஒவ்வொரு முறையும் அமுதவாணன் காப்பாற்றி வருவது மற்ற போட்டியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சில வாரங்களுக்கு முன்பே செல்ல வேண்டிய ஜனனி இவ்வளவு நாள் தாக்கு பிடித்துள்ளார்.

இந்நிலையில் நாளை ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போவது போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தந்து உள்ளது. ஒருவரின் வெற்றி பறிக்கப்பட்டாலும் நியாயம் தான் கடைசியில் வெல்லும் என்பதற்கு ஜனனியின் எலிமினேஷன் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Also Read : 10 வாரமும் நாமினேஷன் லிஸ்டில் வராத போட்டியாளர்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே சாதனை படைத்த அதிர்ஷ்டசாலி

- Advertisement -

Trending News