வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சாதி சம்மந்தமான படத்தில் விஜய் நடிப்பாரா?. கதை தயார் செய்து வைத்திருக்கும் தனுஷ் பட இயக்குனர்

Vijay, Dhanush: விஜய் ஆரம்பத்தில் பல்வேறு விதமான கதைகளத்தில் நடித்து வந்தாலும் ஒரு உச்ச நட்சத்திரம் ஆன பின்பு ஆக்சன் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுவும் அவருக்கு பக்காவாக பொருந்த தொடர்ந்து ஹிட் படங்களை விஜய் கொடுத்து வருகிறார். இந்த சூழலில் தனுஷ் பட இயக்குனர் ஒருவர் விஜய்க்கு சாதி சம்பந்தமான கதையை எழுதி வைத்துள்ளாராம்.

இப்போது விஜய் அரசியலுக்கு வர இருக்கிறார். சமீபகாலமாகவே அவரது படங்களில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் நிறைய இடம் பெற்று வருவதால் அவருடைய படத்தை வெளியிடவே பல சிக்கல் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் சாதி சம்பந்தமான படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு குறைவு தான்.

Also Read : விஜய், அர்ஜுனுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறை இல்லை.. லோகேஷ் மேல் பாய்ந்த ப்ளூ சட்டை மாறன்

இந்நிலையில் தனுஷின் கர்ணன், உதயநிதியின் மாமன்னன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தளபதிக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறார். இவருடைய படங்களில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கப் போராடும் விதமான கதைகளாக தான் இருக்கும்.

தளபதிக்காக சிறப்பான ஒரு கதையை மாரி செல்வராஜ் தயார் செய்து வைத்திருக்கும் நிலையில் விஜய் இடம் எப்படியும் இதை சொல்லி சம்மதம் வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். அதுவும் இந்த கதை விஜய்யின் அரசியல் பயணத்திற்கு சிறப்பாக அமையுமாம்.

Also Read : பூஜா ஹெக்டே போல ராசியில்லாத நடிகையுடன் கோர்த்துவிட படும் விஜய்.. நடிச்ச 4 படமும் நாறிப்போன சோகக்கதை

இதுவரை விஜய் சாதி படங்களில் நடிக்காத நிலையில் இப்போது அரசியலுக்காக இந்த படத்தில் நடித்தால் கண்டிப்பாக பிரச்சனை வருவது உறுதி. ஆனால் மாரி செல்வராஜ் கண்டிப்பாக விஜய்யை நடிக்க வைப்பேன் என்று தைரியமாக சொல்லி இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்பது வரும் காலங்களில் தான் தெரிய வரும்.

இது ஒரு புறம் இருக்க விஜய் லியோ படத்தில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 69 படத்துடன் சினிமாவை விட்டு விஜய் விலக உள்ளார் என்ற ஒரு பேச்சும் போய்க்கொண்டிருக்கிறது. ஏனென்றால் அரசியலில் நுழைந்தால் விஜய் சினிமாவில் செயல்படுவது மிகவும் கடினம்.

Also Read : ஆடியோ லான்சுக்கு ஆப்பு வச்சது போல ட்ரெய்லர் வெளியிட கிளம்பிய சர்ச்சை.. விஜய் மேல அப்படி என்ன காண்டு

- Advertisement -

Trending News