புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய், அர்ஜுனுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறை இல்லை.. லோகேஷ் மேல் பாய்ந்த ப்ளூ சட்டை மாறன்

Vijay-Arjun-Lokesh-Blue Sattai Maaran: எங்கு என்ன சம்பவம் நடக்கும் பிரச்சனையை கிளப்பலாம் என்று காத்திருக்கும் வெகுசில நபர்களில் ப்ளூ சட்டை மாறன் முக்கியமானவர். அதிலும் ரஜினி, விஜய் போன்ற டாப் ஹீரோக்களை வம்பிழுத்து அவர்களின் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொள்வதே இவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது.

அந்த வகையில் தற்போது இவர் லியோ பற்றி ஒரு கருத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார். பொதுவாக லோகேஷ் படங்களில் அதிரடி ஆக்சன் காட்சிகள் தாராளமாக நிரம்பி இருக்கும். அதை வைத்து தான் ப்ளூ சட்டை மாறன் இப்போது ஒரு பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்.

Also read: விஜய்யை சீண்டிப் பார்க்கும் கலாநிதி.. லியோ போஸ்டரால் ஏற்பட்ட குழப்பம்

அதாவது லோகேஷ் தன் படங்களில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை அதிகம் பயன்படுத்துகிறார். அதே போன்று சிகரெட், மது போன்ற கெட்ட விஷயங்களும் அளவுக்கு அதிகமாக காட்டப்படுகின்றன. இதை விஜய், அர்ஜுன் போன்ற நடிகர்களும் ஆதரிக்கின்றனர்.

அவர்களுக்கு இன்றைய சமுதாயத்தின் மேல் எந்த அக்கறையும் இல்லை. இது போன்ற காட்சிகளை பார்த்து இளைய தலைமுறை சீரழியும் என்ற எண்ணம் இல்லாமல் நடிக்கின்றனர் என குத்தி காட்டி ட்வீட் போட்டுள்ளார். இது விஜய் ரசிகர்களை இப்போது உசுப்பேத்தி இருக்கிறது.

Also read: ஆடியோ லான்சுக்கு ஆப்பு வச்சது போல ட்ரெய்லர் வெளியிட கிளம்பிய சர்ச்சை.. விஜய் மேல அப்படி என்ன காண்டு

ஏனென்றால் சமீப காலமாகவே அவர் லியோ குறித்து தாறுமாறான கருத்துக்களை தான் வெளியிட்டு வருகிறார். அதிலும் ரிலீஸ் நாள் நெருங்கும் சமயத்தில் அவர் இப்படி செய்வதன் மூலம் நெகட்டிவ் விஷயங்களை பரப்ப முயல்கிறார் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் அவருக்கு சரியான பதிலடியையும் கொடுத்து வருகின்றனர். எப்படி என்றால் படத்தைப் பார்த்து கெட்டுப் போகும் அளவுக்கு நாங்கள் அறிவில்லாமல் இல்லை. ஒரு நடிகராக அவர்கள் தங்களுடைய வேலையை மட்டும் தான் செய்கிறார்கள். அது அவர்களுடைய கதாபாத்திரம் என லோகேஷ் மேல் வன்மத்துடன் பாய்ந்த ப்ளூ சட்டையை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Also read: பூஜா ஹெக்டே போல ராசியில்லாத நடிகையுடன் கோர்த்துவிட படும் விஜய்.. நடிச்ச 4 படமும் நாறிப்போன சோகக்கதை

- Advertisement -

Trending News