மணிரத்னத்தை விடாமல் துரத்தும் தனுஷ்.. காயப்பட்ட சிங்கம், திருப்பி அடிக்க நாள் குறிச்சாச்சு தலைவரே!

தற்போது சோசியல் மீடியாக்களில் மணிரத்தினம் மற்றும் தனுஷ் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். அதற்கு ஒரு நாள் முன்னதாக தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வெளியானது.

மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் பல திரைப்படங்கள் தங்கள் ரிலீஸ் செய்தியை மாற்றியது. ஆனால் தனுஷ் மட்டும் தைரியமாக மணிரத்தினத்துடன் மோத தயாரானார். அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியான மறுநாள் நானே வருவேன் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இது எல்லாம் பார்த்து திரையுலகில் பலரும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு வந்தனர். அதையெல்லாம் கண்டு கொள்ளாத படக்குழு நானே வருவேன் திரைப்படத்தை திட்டமிட்ட நாளில் வெளியிட்டது.

Also read : சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய தனுஷ்.. ரிலீசுக்கு முன்பே பல கோடி பிசினஸ் செய்த வாத்தி

முதல் நாளில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் போகப்போக வசூலில் மந்தமானது. இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் தான். ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த அந்த திரைப்படம் அரங்கம் நிறைந்த ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இப்போதும் கூட இப்படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் நானே வருவேன் திரைப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதனால் பலரும் தனுஷிற்கு இந்த அவமானம் தேவையா என்று வெளிப்படையாகவே கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் தற்போது தனுஷ் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதாவது அவர் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் தனுசுடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Also read : சத்தமே இல்லாமல் மணிரத்னம் செய்த தில்லாலங்கடி வேலை.. பொன்னியின் செல்வனில் காக்கப்பட்ட சீக்ரெட்ஸ்

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் இணைந்துள்ளார். அவருக்கு இப்படத்தில் பவர்ஃபுல்லான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தனுஷ் இப்படத்திற்காக அதிகபட்சமாக 140 நாட்கள் கால்ஷூட் கொடுத்துள்ளார். அந்த வகையில் இப்படம் அடுத்த வருட கோடைக்கு வெளிவர இருக்கிறது. இந்த விஷயம் தான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஏனென்றால் அடுத்த வருட கோடைக்கு தான் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வெளிவர இருக்கிறது. இப்படி தனுஷ் மீண்டும் மணிரத்தினத்தை விடாமல் துரத்துவது ஏன் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஆனால் இந்த முறை தனுஷ் சொல்லி அடிப்பார் என்று கூறுகின்றனர். ஏனென்றால் இந்த கேப்டன் மில்லர் அந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்று பட குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

Also read : கிடப்பில் போட்ட கதையை கையில் எடுத்த தனுஷ்.. பாகுபலி போல் தாக்கத்தை ஏற்படுத்த போகும் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்