வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மாமனாரிடம் பொங்கி எழுந்த மருமகள்.. பாண்டியனின் டிராமாவால் மாட்டிக் கொண்டு முழிக்கும் மகன்கள்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பாண்டியனின் அலப்பறை ரொம்பவே ஓவராக தான் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது மூத்த மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது தனி மரமாக சுற்றுவதற்கு இவர் தான் காரணம். அதே நேரத்தில் மற்ற இரண்டு மகன்கள் அப்பாவுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணி வீட்டிற்கு கூட்டிட்டு வந்த பிறகு மூத்த மகனை நினைத்து புலம்பித் தவிக்கிறார்.

அது மட்டுமில்லாமல் கல்யாணம் ஆகிவிட்டால் கணவன் மனைவி விஷயத்தில் மூக்கை நுழைப்பது முற்றிலும் தவறானது. ஆனால் அதை பாண்டியன் செய்யத் தவறி விட்டார். அதாவது மீனா நல்ல எண்ணத்தில் தான் மூத்த மச்சானுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று ஏற்பாடு பண்ணினார். ஆனால் இதைக் கெடுக்கும் விதமாக ராஜியின் அப்பா செய்த சதியால் மொத்த காரியமும் சொதப்பிவிட்டது.

இது தெரியாமல் செந்தில், இதற்கெல்லாம் காரணம் நீதான் என்று மீனாவிடம் சண்டை போடுகிறார். இதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பாண்டியன் இரவு என்று கூட பார்க்காமல் ரூம் கதவை தட்டி செந்திலிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் செந்திலை அடிப்பதற்கு பாண்டியன் கை ஓங்குகிறார்.

Also read: முத்துவின் 2 லட்ச ரூபாய் கனவை சுக்குநூறாக உடைக்க போகும் மச்சான்.. தனக்குத்தானே சூனியம் வைத்த விஜயா

இதை பார்த்ததும் மீனா நீங்கள் எப்படி என் கணவரை என் முன்னாடியே அடிப்பீர்கள் என்று மாமனாரிடம் பொங்கி எழுந்து கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார். உடனே செந்தில் என் அப்பாவை நீ ஏன் எதிர்த்து பேசுகிறாய். என்னை அடித்து திட்டுவதற்கு அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. நீ ஏன் உள்ளே வருகிறாய் என்று மீனாவை அடிக்க கை ஓங்கி விட்டார். உடனே இதை பாண்டியன் தட்டிக் கேட்கிறார்.

ஆக மொத்தத்தில் பாண்டியன் அப்பா என்கிற சென்டிமென்ட் வைத்து டிராமா போடுவதால் இதற்கு மொத்த குடும்பமும் அடிமையாக இருக்கிறார்கள். பாவம் இதில் மாட்டிக் கொண்டு முழிப்பது மூத்த மகன் சரவணன் தான். எதற்கெடுத்தாலும் அப்பா மனசு கஷ்டப்படக்கூடாது என்று காலில் விழுந்து கெஞ்சி நல்ல ஒரு பையன் என்பதை காட்டும் விதமாக இருக்கிறார்.

இதெல்லாம் தெரியாமல் இந்த வீட்டிற்கு வாக்கப்பட்டு வந்த இரண்டு மருமகள்களின் கெதி தான் ஒவ்வொரு நாளும் பாவமாக இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் முக்கிய காரணம் கோமதி. இப்பொழுது எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்து வருகிறார். இதனை அடுத்து ராஜிக்கும் கதிருக்கும் சண்டை வெடிக்கப் போகிறது. ஆனால் இவர்களுடைய சண்டை கடைசியில் காதலாக மாறப் போகிறது.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

- Advertisement -

Trending News