மணிரத்தினத்திற்கு இணையாக பேசப்பட்ட இயக்குனர்.. ஒரே விஷயத்தால் எல்லா தகுதியும் இழந்த டைரக்டர்

Controversial hero Ram Gopal Varma who did not shine like Mani Ratnam: தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு சேர்த்த பெருமை மணிரத்தினத்தையே சாரும். தான் பேசாமல் தன்னுடைய படங்களை பேச வைப்பவர் இவர். காலங்களை கடந்த பின்னும் எவர்கிரீன் மூவியாக இவரின் படைப்புகள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படுவது என்பது நிதர்சனமான உண்மை. 

இந்திய அளவிலும் வேற்று மொழிகளை சார்ந்த நடிக, நடிகைகளும் இவரின் படங்களில் நடிப்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொள்வது உண்டு. தான் கொண்ட கொள்கைக்காக வயசை ஒரு பொருட்டாக கருதாது, கடின உழைப்புடன் பொன்னியின் செல்வனை அரங்கேற்றினார். அப்படிப்பட்ட மணிரத்தினத்தைப் போலவே ஒரு காலகட்டத்தில் மற்றொரு இயக்குனரும் இவருக்கு நிகராக வளர்ந்து வந்தார். 

இந்த இயக்குனரின் சிறந்த திரைக்கதைக்கும் இயக்கத்திற்கும் வாங்காத விருதுகளை எண்ணலாம். எடுத்த முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் ஒரு கட்டத்தில் தனது பர்சனல் கேரக்டரால் மணிரத்தினத்திடம் தோற்றுப் போய்விட்டார். 

Also read: 6 படங்களை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி.. மணிரத்தினத்துக்கே குட் பாய் சொன்ன மலர்

பாலிவுட் சர்ச்சை நாயகன் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது  இயக்குனர் ராம் கோபால் வர்மா அவர்களே. நாகார்ஜுனாவின் சிவா என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான ராம்கோபால் தொடர்ந்து அரசியல், குற்றப் பின்னணி இவற்றை மையமாக வைத்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார். இவரின் படங்கள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இவரே அதை இயக்கவும் செய்தார். 2010 சூர்யா நடிப்பில் வெளிவந்த ரத்தசரித்திரம் படத்தை இயக்கியவர் இவரே!

இவரது கேரக்டர் காரணமாக பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஒரு கட்டத்தில்  சர்ச்சைக்குரிய படங்களை எடுக்க ஆரம்பித்து அதை பிரமோஷன் செய்ய எந்த எல்லைக்கும் போவார் என்பது போல் பல தேவையில்லாத வேலைகளை செய்து  நெட்டிசன்களுடையே வாங்கி கட்டிக் கொண்டார். 

இது மட்டுமா குடியரசு தலைவர் தேர்தலுக்கு முன் மதிப்பிற்குரிய திரௌபதி முர்முவை  சீண்டும் விதத்தில் வலைதளத்தில் பதிவிட்டு உத்திர பிரதேச போலீசாரால் கண்டனத்திற்கு உள்ளாகி தேடப்பட்டு வந்தார் ராம்கோபால் வர்மா. மனுஷன் தேடித்தேடி போயி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

Also read: ராம்கோபால் வர்மா இயக்கிய 5 ஆக்சன் த்ரில்லர் படங்கள்.. அதுலயும் அந்த கேங்க்ஸ்டர் படம் கண்டிப்பாக பார்க்கணும்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்