திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

இனி ஒரு நிமிஷம் பிக் பாஸ் வீட்டில இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்.. தலை தெரிக்க ஓடிய கமலின் செல்லம்

BB7: பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்டு ஒரு வாரம் தான் ஆயிருக்கு, ஆனால் அதுக்குள்ள ஏகப்பட்ட பஞ்சாயத்தை கூட்டி விட்டனர். அதிலும் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 17 போட்டியாளர்களுள் ஒருவர், ‘இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருந்தா, எனக்கு பைத்தியம் பிடித்து விடும். நான் உடனே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன்’ என அதிரடியான முடிவெடுத்து வெளியேறுகிறார்.

இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்களின் வயதில் மூத்தவராக  இருக்கக்கூடிய பவா செல்லதுரை ஒரு சிறந்த எழுத்தாளர். இவரை கமலுக்கும் ரொம்பவே பிடிக்கும், அவருடைய செல்லப் பிள்ளையாக இருந்தாலும் இப்போது இருக்கும் இளம் தலைமுறை போட்டியாளர்களுடன் அவரால் போட்டி போட முடியவில்லை. இந்த வீட்டில் இருக்கும் சூழ்ச்சி, வன்மம், ஒருவரை ஒருவர் குத்தி பேசுவது என இதெல்லாம் எனக்கு சுத்தமாகவே பிடிக்கல.

Also Read: டாட்டூ போடும், தம்மடிக்கும் அத கேக்க நீ யாரு.. பெத்துவிட்டதெல்லாம் நேந்துவிட்ட மாதிரி ஆடாத, விலாசிய வனிதா

இவ்வளவு நாளா நான் மேன்மை உடைய மனிதர்களுடன் தான் பழகி இருக்கிறேன். அப்படி இருக்கும்போது இந்த வீட்டில் ஒரு நாளை கடத்துவது கூட இனிமேல் முடியாது. அது மட்டுமல்ல என்னோட உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசம் அடைகிறது.  இப்பவே நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன். எனக்கு இங்க இருக்கும் போட்டியாளர்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும் மனரீதியாக 1% கூட இனிமேல் இந்த போட்டியில் என்னால் நீடிக்க முடியாது என்று பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

பிக் பாஸும் பவா செல்லத்துரையை எவ்வளவோ சமாதானம் படுத்தி பார்த்தார். ஆனால் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். ‘உடனடியாக நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முடியாது. நாளை வேண்டுமானால் பார்க்கலாம். இன்று இரவு நன்றாக யோசித்து உங்களது முடிவை மாற்றிக்கொள்ள பாருங்கள்’ என்றும் பிக் பாஸ் சொன்னார்.

Also Read: எலிமினேஷன் ஆகிடுவோமோ என ஜோக்கர் ஆக மாறிய பிரதீப்.. இடையில் பூந்து கிடா வெட்டிய விஷ்ணு

ஏற்கனவே பவா செல்லதுரையை கேப்டன் சரவணன் சோம்பேறி என்ற காரணத்தை காட்டி அவரை இந்த முறையும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி விட்டார். இதுவும் பவா வீட்டை விட்டு வெளியேற ஒரு காரணமாக அமைந்து விட்டது. இப்போது  பவா, ‘நான் அந்த ஸ்மால் பாஸ் வீட்டுக்கு போக மாட்டேன். இன்று இரவு பிக் பாஸ் வீட்டிலேயே இருந்து விட்டு நாளை நான் வெளியேறி விடுவேன்’ என்பதையும்  பிக் பாஸ் இடம் சொல்லிவிட்டார்.

ஒருவேளை அனன்யாவை அனுப்புவதற்கு பதிலா இந்த வாரம் பவா செல்லத்துரையை அனுப்பி இருக்கலாம். ஆனால் மக்கள் பவா பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தனர். அதனால் தான் ஓட்டுக்களை அளித்தனர். ஆனால் இந்த வீட்டில் நடப்பது பவா செல்லத்துரைக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

Also Read: நானும் ரவுடிதான் என காமெடி பண்ணும் கோமாளி.. உக்கிரமாக மாறிய பிக்பாஸ் வீடு

அவருடைய கதை சொல்லும் ஸ்டைலும் மாறிவிட்டது. வெளியில் அவர் கதை சொல்லும் போது அவர் பேச்சில் ஒரு உறுதி இருக்கும். ஆனால் இந்த வீட்டில் அவர் சொன்ன பிழை என்ற கதையை சரியாக சொல்லத் தவறியதால் அதில் பிழை கண்டுபிடித்து கமல் திருத்தியதும், இப்போது பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு காரணமாயிடுச்சு.

- Advertisement -

Trending News