டிஆர்பியில் பெருத்த அடி வாங்கிய விஜய் டிவி சீரியல்.. மட்டமாக உருட்ட போகும் செகண்ட் பார்ட்

Vijay-Tv-Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரால் விஜய் டிவியின் தொடர்களின் டிஆர்பி சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற தொடர்களின் டிஆர்பி சில மாதங்களாகவே மந்தமாக தான் இருந்து வருகிறது.

மேலும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டதால் விஜய் டிவியில் சில சீரியல்கள் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் முடிவுக்கு வர உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அப்பாடா ஒரு வழியாக இந்த தொடருக்கு பூசணிக்காய் உடைக்க உள்ளார்கள் என்று நினைக்கும் நேரத்தில் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது.

Also Read : விஜய் டிவி மானமே உங்க கையில தான் இருக்கு.. 18 போட்டியர்களின் சம்பள விவரத்தை கசிய விட்ட பிக்பாஸ்

விஜய் டிவியில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் இன்னும் சில வாரங்களில் இந்த தொடர் முடிவு பெற இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த தொடரில் கடைக்குட்டி பிள்ளையாக இருந்த கண்ணன் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார். எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வருகிறது என மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளார் இயக்குனர்.

Also Read : பிக்பாஸில் முதல் ஆளாக வெளியேற போவது அனன்யா இல்லையாம்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்து அனுப்பிய கமல்

அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிந்த உடனே இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. சமீபத்தில் இதற்கான ப்ரோமோ வீடியோவுக்கான ஷூட்டிங்கை எடுத்துள்ளனர். ஆகையால் விடாது கருப்பு போல் ரசிகர்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விடாமல் துரத்த இருக்கிறது.

மேலும் அதே நடிகர், நடிகைகளை வைத்து செகண்ட் பார்ட் எடுக்க உள்ளார்களா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. கண்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது.

Also Read : காதல் பரத் போல் பைத்தியமாகிய எக்ஸ் புருஷன்.. ரெண்டு பொண்டாட்டி கதையை உருட்டும் பாக்கியலட்சுமி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்