ஜூன் மாதத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் சினிமா அப்டேட்ஸ்.. பிறந்தநாளில் லியோ கொடுக்கும் ட்ரீட்

தமிழ் சினிமாவில் ஜூன் மாதத்தில் மட்டும் டாப் நடிகர்களின் படங்களின் அப்டேட் சுடச்சுட வெளியாக காத்திருக்கிறது. இதனால் இன்னும் சில தினங்களில் இந்த மாதம் நிறைவடைய போவதால் அடுத்த மாதம் எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அதிலும் தளபதி ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் விஜய் வரும் ஜூன் 22ஆம் தேதி தன்னுடைய 49 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அன்று அவருடைய ரசிகர்கள் தடபுடலாக பல ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் ட்ரீட் கொடுக்கும் விதமாக விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் ஆகியவை வெளியாக உள்ளது.

Also Read: விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் கார்த்தி.. பெரும் பிரச்சனையை கிளப்பிய நெட் பிளிக்ஸ்

அதேபோல சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் ப்ரோமோ வீடியோவும் ஜூன் மாதத்தில் தான் வெளியாகிறது. பத்து மொழிகளில் தயாராகும் இந்தப் படம் 3டி எஃபெக்டில் உருவாகி கொண்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவையும் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி கொண்டிருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தை விஜய்யின் லியோ படத்துடன் ரிலீஸ் செய்யும் யோசனையிலும் படக்குழு தற்போது இருக்கிறது.

Also Read: வில்லன்களே இல்லாமல் தளபதி மாஸ் காட்டிய 5 படங்கள்.. விஜய்யின் விண்டேஜ் வெற்றிகள்

இதன் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் டீசரும் ஜூன் மாதத்தில் தான் வெளியாகிறது. மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இதன் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பே இந்த படத்தின் டீசரை அடுத்த மாதம் வெளியிட்டு ரசிகர்களை குதூகல படுத்தப் போகின்றனர்.

இது மட்டுமல்ல ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் ஜூன் மாதத்தில் தான் வெளியாகிறது. இவ்வாறு அடுத்த மாதத்தில் விஜய் பிறந்தநாள் கொண்டாடுவதால் லியோ படத்தின் அப்டேட் தான் வரும் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என டாப் நடிகர்களின் படங்களின் அப்டேட்ஸ் வெளியாக இருப்பதால் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

Also Read: செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய அனுஷ்கா.. தேவசேனாவுடன் தனுஷ் செய்த தரமான சம்பவம்