ஜெனிக்கு துரோகம் செய்யும் செழியன்.. பொம்பள சோக்கு கோபியை அப்படியே உரிச்சு வச்சிருக்காரு

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இனியா டூருக்கு தந்தையுடன் செல்ல புறப்படுகிறார். ஆனால் மறுபுறம் ராதிகாவின் மகள் மயூ பெரிய பெண்ணாக ஆகிவிடுகிறார். இதை விழா போல கொண்டாட வேண்டும் என்று ராதிகாவின் அம்மா ஆசைப்படுகிறார்.

ஆகையால் இனியாவுடன் டூருக்கு கோபியால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதை இனியாவிடம் கோபி சொல்லும் போது மிக கோபம் கொள்கிறார். ஆனாலும் செழியனை உன்னோடு டூருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று ஒரு வழியாக இனியாவை கோபி சமாதானம் செய்து விடுகிறார்.

Also Read : தேய்ந்துபோன டேப் ரெக்கார்டு சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவியின் புத்தம் புதுத் தொடர்கள்.. விறுவிறுப்பாக சூடு பிடிக்கும் 5 நாடகங்கள்

மேலும் செழியன் இடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதற்காக கோபி போன் செய்யும்போது, செழியன் மாலினியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். கோபியை அப்படியே உரித்து வைத்திருக்கும் செழியன் பொம்பளை சோக்கில் இப்போது மாலினியின் வலையில் விழுந்து இருக்கிறார்.

கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி என்ற சொல் மொழிக்கு ஏற்ப கோபி தான் பாக்கியா இருக்கும்போது ராதிகாவுடன் பழகி திருமணம் செய்து கொண்டார். இப்போது அவரது மகன் செழியனும் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் ஜெனிக்கு துரோகம் செய்துவிட்டு மாலினி உடன் பழகி வருகிறார்.

Also Read : கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியாவே இருக்கே.. இருதலைகொள்ளி எறும்பாக மாட்டிய அங்கிள் கோபி

அப்போது கோபி போன் செய்து இனியாவின் டூருக்கு போக வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு என்னால் முடியாது என செழியன் மறுத்து போனை வைத்து விடுகிறார். இதனால் இனியாவிடம் இதை எப்படி சொல்வது என்று தெரியாமல் கோபி தயங்கிக்கொண்டே பேசுகிறார். இதனால் இனியா மிகுந்த சோகம் கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து எழிலுக்கும் சூட்டிங் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியலட்சுமி குடும்பம் யோசனையில் உள்ளனர். ஆனால் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை எனச் செழியன் மாலினியுடன் அரட்டை அடித்து பேசிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் பொம்பள சோக்கு கோபியையே மிஞ்சு விடுகிறார் செழியன்.

Also Read : ரகசியமாக எக்ஸ் காதலனை சந்திக்கும் ஈஸ்வரி.. புருசனை டார் டாராக கிழித்து தொங்கவிட்டு நந்தினி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்