செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியாவே இருக்கே.. இருதலைகொள்ளி எறும்பாக மாட்டிய அங்கிள் கோபி

Baakiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் கோபியை அப்படியே உரித்து வைத்திருக்கும் செழியன் வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழக ஆரம்பிக்க உள்ளார். இதனால் பாக்கியலட்சுமி குடும்பத்தில் பிரச்சனை வர உள்ளது.

இப்போது கோபிக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதாவது இனியாவின் கல்லூரியில் சுற்றுலா செல்ல இருக்கிறார்கள். இதில் பெற்றோரையும் அழைத்துச் செல்லலாம் என்பதால் கோபி கண்டிப்பாக வருவதாக இனியாவுக்கு வாக்கு கொடுக்கிறார். இதனால் இனியா மிகுந்த மகிழ்ச்சியுடன் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.

Also Read : குழாயடி சண்டையை போட பிக் பாஸ் வீட்டிற்கு வரும் 18 போட்டியாளர்கள்.. புது பொண்டாட்டியை தவிக்க விட்டு வரும் கிழவன்

மேலும் இந்த முறை அப்பாவுடன் இந்த சுற்றுலாவை நல்லபடியாக கண்டு களிக்க வேண்டும் என்ற கனவுடன் இனியா இருக்கிறார். மேலும் கோபி இதற்காக ஆயத்தம் ஆகி கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இதற்கு ராதிகாவும் சம்மதம் கொடுத்து விட்டார். ஆனால் கோபி கிளம்பும் நேரத்தில் தான் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று அரங்கேறி இருக்கிறது.

அதாவது ராதிகாவின் மகள் மயூ அந்த நேரத்தில் பெரிய மனுஷியாகி விடுகிறார். இதனால் ராதிகா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள நிலையில் இதற்கான நிகழ்ச்சியை தயார் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். உடனே கோபி டூர் போக வேண்டும் என்று சொன்னவுடன் மயூ விட இதுதான் உங்களுக்கு முக்கியமா என ராதிகா மிரட்டுகிறார்.

Also Read : அப்பத்தாவுடன் சேர்ந்து குணசேகரனை செல்லாக் காசாக்கிய ஜீவானந்தம்.. 40% ஷேர்லாம் இல்ல, ஒரு கிளாஸ் மோர் இருக்கு குடிச்சிட்டு போ!

ஒருபுறம் ஆசையுடன் கிளம்பி இருக்கும் இனியா இந்த விஷயம் தெரிந்தால் அப்பா மீது கடும் கோபத்திற்கு உள்ளவர். இவ்வாறு கோபி கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இனியாவா, மயூவா என்று இருதலைகொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்டிருக்கிறார் கோபி.

ரெண்டு பொண்டாட்டியை கட்டினால் இந்த பிரச்சனை எல்லாம் சந்தித்து தான் ஆக வேண்டும். மேலும் கோபி எந்த முடிவு எடுத்தாலும் கண்டிப்பாக ஒருவரின் கோபத்திற்கு உள்ளாகுவது உறுதி. இதனால் எதிர்பார்க்காத பல திருப்பங்களுடன் வரும் வாரங்களில் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : உளறித் தள்ளிய முரட்டு வில்லன் வசமாக சிக்கும் வேட்டை நாய்.. குணசேகரன் கூண்டோட கைலாசம் செல்லும் நேரம் வந்துடுச்சு

- Advertisement -spot_img

Trending News