தேய்ந்துபோன டேப் ரெக்கார்டு சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவியின் புத்தம் புதுத் தொடர்கள்.. விறுவிறுப்பாக சூடு பிடிக்கும் 5 நாடகங்கள்

Vijay Tv New Serials: எப்போதுமே சீரியல் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர் தான். அந்த வகையில் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரே சீரியல் என்றால் அது எதிர்நீச்சல். ஆனால் இதற்குப் போட்டியாக விஜய் டிவியில் பல சீரியல்களை புத்தம் புதிதாக இறக்கி இருக்கிறார்கள். ஆனாலும் எதிர்நீச்சல் சீரியலை அசைக்கக்கூட முடியவில்லை.

அதற்கு பதிலாக விஜய் டிவியில் பல வருட காலமாக தேய்ந்து போன டேப் ரெக்கார்டு மாதிரி அழுத்துப்போன நாடகங்களை பின்னுக்கு தள்ளி விட்டது. அதாவது விஜய் டிவியில் புது நாடகங்கள் வந்தபின் இதில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களை மறக்கடிக்கும் விதமாக அமைந்துவிட்டது.

Also read: விஜய் டிவியை அட்ட காப்பி அடித்து சன் டிவி தொடங்கும் 2ம் பாகம்.. அவசர அவசரமாக முடிவுக்கு வரும் நாடகம்

அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக சூடு பிடித்துக் கொண்டு போகிற நாடகங்களை பற்றி தற்போது பார்க்கலாம். இதில் ஐந்தாவது இடத்தில் காற்றுக்கு என்ன வேலி என்ற சீரியல் கொஞ்சம் பழையதாக இருந்தாலும் ரொமான்டிக் காதலை வைத்துக் கொண்டு வருகிறது. இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்று காத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று இவர்களுடைய திருமணம் மக்கள் எதிர்பார்த்தபடி நடந்து முடிந்து விட்டது. இதனால் இந்த நாடகத்தின் மீது ஈர்ப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது.

அடுத்தபடியாக விஜய் டிவியில் முதன் முதலாக கால் எடுத்து வைத்த ராதிகாவின் சீரியல் கிழக்கு வாசல் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதில் விஜய்யின் அப்பா மற்றும் ராதிகாவை பார்ப்பதற்காகவே மக்கள் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள். அடுத்தபடியாக மக்கள் மனதில் இடம் பிடித்த தமிழும் சரஸ்வதியும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

Also read: பிக் பாஸால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்கள்.. டிஆர்பியை ஏற்ற போட்ட பக்கா பிளான்

இதில் அர்ஜுன் செய்த தில்லு முல்லு விஷயங்கள் தற்போது வெட்ட வெளிச்சமாக ஆகப்போகிறது. அடுத்தது எலியும், பூனையும் ஆக சண்டையில் ஆரம்பித்த ஜோடி எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் ஆனதால் கல்யாணத்துக்கு பிறகும் மோதிக் கொள்ளும் ஆகா கல்யாணம் சீரியல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த நாடகத்தை அனைவரும் விரும்பி பார்த்து ஆகோ ஓஹோன்னு கொண்டாடி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து முதலிடத்தில் அனைவரும் ஆசையுடன் ஒவ்வொரு நாளும் மிஸ் பண்ணாமல் பார்த்துக் கொண்டு வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் சின்னத்திரை விஜய் சேதுபதி யாக ஹீரோ முத்துவை கொண்டாடி வருகிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி இவருடைய நடிப்பும் எதார்த்தமாக இருக்கிறது. இந்த நாடகத்தின் மூலம் விஜய் டிவியில் தற்போது டிஆர்பி ரேட் அதிகரித்துள்ளது.

Also read: விஜய் டிவியிலிருந்து வெளியேற இதுதான் முக்கிய காரணம்.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என தெரிந்து ஓடிய DD

- Advertisement -spot_img

Trending News