சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகாமல் ஓடிடி-யில் பெரிய ஹீரோக்களின் படங்களும் ரிலீஸ் ஆகி ரசிகர்களை மகிழ்வித்தது. ஆனால் நிலைமை சரியான பிறகும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களை ஓடிடி தளம் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறது.

அந்த வகையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் சுமார் 13 படங்களை ஒரே ஓடிடி நிறுவனம் வாங்கி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிலும் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிறது. இதில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பி வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் உரிமையை அதிக விலை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.

Also Readஜிகர்தண்டா 2 படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணையும் பிரபலம்.. 150 கோடியை குறிவைத்த கார்த்திக் சுப்புராஜ்

இதைத்தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் 1800-களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் படத்தையும் ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் உரிமையையும் நெட்பிளிக்ஸ் பெற்று இருக்கிறது.

மேலும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன் படத்தையும், விக்னேஷ் சிவம் இயக்கம் அஜித்தின் ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் தான் பெற்றிருக்கிறது. இதேபோன்று ஜப்பான், மாமன்னன், ஆரியன் போன்ற படங்களும் நெட்பிளிக்ஸ் அதிக விலை கொடுத்து ஓடிடி-யில் வெளியிடும் உரிமையை வாங்கி உள்ளது.

இதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வடுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது. இதில் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் தான் பெற்றுள்ளது.

Also Read: கேரக்டரை மாத்த சொல்லி அதிகப்பிரசங்கித்தனம் செய்த சிவகார்த்திகேயன்.. அப்படியே வச்சு ஹிட்டடித்த கார்த்திக் சுப்புராஜ்

இத்துடன் தனுஷின் வாத்தி படமும் அதைத்தொடர்ந்து வரலாறு முக்கியம், தலைகோதல் இறுகப்பற்று, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களையும் ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் உரிமையையும் நெட்பிளிக்ஸ் பெற்று இருக்கிறது. இவற்றையெல்லாம் சுமார் 1000 கோடி செலவு செய்து ott-யில் வெளியிடும் உரிமையை நெட்லிக் கைப்பற்றி இருக்கிறது.

ஆகையால் இந்த 13 படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் நிச்சயம் இந்த வருடத்தில் மற்ற ஓடிடி நிறுவனங்களுக்கெல்லாம் பயங்கர டப் கொடுக்கும் வகையில் லாபத்தை அல்ல போகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்களும் சோப் நடிகர்களின் இந்த 13 படங்களும் ஓடிடி-யில் எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

Also Read: 2023ல் வெளிவர இருக்கும் 10 ஹிட் படங்களின் 2-ம் பாகம்.. பொன்னியின் செல்வன் முடிவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

Advertisement Amazon Prime Banner