புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

விஜய்காந்தை பற்றி வாய்க்கூசாமல் அவதூறாக பேசிய பச்சோந்தி.. தரம் தாழ்ந்து போன நடிகர்

Unwanted Speach about Vijaykanth: சில விஷயங்கள் காலம் கடந்த பிறகு தான் உணர முடியும். அதனுடைய மகத்துவம் என்னவென்று புரியும் என சொல்வார்கள். அது எந்த அளவுக்கு உண்மையானது என்று தற்போது தான் புரிகிறது. விஜயகாந்த் நம்முடன் இல்லை என்று கூட சொல்ல மனமில்லாமல், அவருடைய இழப்பை கண்டு ஒவ்வொருவரும் வாடி வருகிறோம். அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட உன்னத தலைவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து இருக்கலாம் என்று தற்போது பலரும் புலம்பிக்கொண்டு வருகிறார்கள்.

அதற்கு காரணம் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்பதை காட்டிலும் தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்தவித கஷ்டமும் வந்து விடக்கூடாது என்று ஒரு நல்ல எண்ணத்தில் போராடி வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். அந்த நேரத்தில் இவர் மூச்சு கொடுத்து பேசிய ஒவ்வொரு விஷயத்தையும் காது கொடுத்து கேட்காமல் கேளியும் கிண்டலும் செய்துவிட்டு உதாசீனப்படுத்தி விட்டார்கள். அதனாலேயே என்னமோ இப்படிப்பட்ட சொக்க தங்கத்தை தமிழ்நாடு தவற விட்டு விட்டது.

இந்த சூழ்நிலையில் இவரை பற்றி ஒரு நடிகர் கொஞ்சம் கூட சபை நாகரிகம் வாயடக்கம் இல்லாமல் விஜயகாந்த் பற்றி அவதூறாக பேசிய விஷயம் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பொழுது அந்த நடிகர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கிறார் என்பது தெரிகிறது. அவர் வேறு யாருமில்லை விஜயகாந்த் கை கொடுத்து தூக்கி விட்டு தற்போது நன்றி கெட்ட துரோகியாக நிற்கும் வடிவேலு தான்.

Also read: கேப்டன் இறப்பில் ரஜினி, கமலுக்கு இருந்த பொறுப்பு.. நன்றி மறந்த நடிகர் சங்கம்

நேரத்துக்கு நேரம் மாறுவது பச்சோந்தியின் குணம். அதேபோல நடிகர் வடிவேலுவின் பேச்சு இருக்கிறது. அதாவது கலைஞர் ஒரு நேரத்தில் அரசியல் கூட்டம் கூடிய சபையில் வடிவேலு அவருடைய உரையாடலை கொடுக்கிறார். அதில் நேத்து, முந்தானத்து எல்லாம் ஒருவர் கட்சியை ஆரம்பிச்சுட்டு நாளை கழிச்சு முதலமைச்சராகப் போகிறார் என்று ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார் என்று நக்கலும் நையாண்டியும் கலந்த பேச்சுடன் கேப்டன் விஜயகாந்தை தாறுமாறாக பேசி வம்பு இழுத்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் அவர் நிலைமையை பற்றியும், தகாத வார்த்தைகளையும், கொச்சையான பேச்சையும் கொடுத்து கேப்டன் என்கிற பட்டத்தையும் வேற கொடுத்து இருக்கிறார்கள் என்று மட்டும் மரியாதை இல்லாமல் கலைஞர் முன்னாடி கேப்டன் விஜயகாந்தை பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் பேசிய இந்த வீடியோவை பார்த்த மக்கள் அனைவரும் கொந்தளித்து போய் வடிவேலு மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அனைவரும் கமெண்ட்ஸில் வடிவேலுவை தாறுமாறாக வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Also read: கடைசி வரை விஜயகாந்தை பார்க்க விரும்பாத வடிவேலு.. பொட்டில் அடித்த மாதிரி சொன்ன மன்சூர்

- Advertisement -spot_img

Trending News