சாதி எல்லாம் பார்க்கவேண்டாம், 12 வருஷமா எனக்கு அவரை தெரியும்.. கெஞ்சி கேட்ட யோகி பாபு

Comedian Yogi Babu: தன் தோற்றத்தாலும், எதார்த்தமான நகைச்சுவை உணர்வாளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் தான் யோகி பாபு. அவ்வாறு தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வரும் இவர் மீது வீண் பழி போடப்பட்டு வரும் வீடியோ விவகாரம் குறித்த தகவலை பற்றி இத்தொகுப்பு காணலாம்.

தற்பொழுது தமிழ் சினிமாவை பொறுத்தவரை, முக்கிய நகைச்சுவை நடிகரை பார்க்கப்படும் யோகி பாபு இறைவழி மீது ஆர்வம் கொண்டவர். மேலும் இவர் ஒரு தீவிர முருக பக்தர் ஆவார். அவ்வாறுஇருக்க, தற்பொழுது தீண்டாமை காரணமாக குருக்கள் இவரை ஒதுக்கப்பட்டார் என வெளியான தகவல் சோசியல் மீடியாவில் தவறாக பரவி வருகிறது.

Also Read: தக்‌ஷா டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம்.. நிஜ வாழ்க்கையிலும் சாணக்கியன் என உறுதி செய்த அஜித்

அதை குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் யோகி பாபு. நான் தீவிர முருகன் பக்தன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் யாரோ ஒருவர் வீண்பழிக்காக போடப்படும், வதந்தியாக வெளிவந்த இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் எனவும் வெளியிட்டு வருகிறார்.

திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி கோவிலுக்கு நான் அடிக்கடி போவதுண்டு. அங்குள்ள முருகன் அருளால் தான் நான் அனைத்து காரியங்களும் தொடங்குவது உண்டு. அவ்வாறு நான் பைக் வாங்கிய காலத்துல இருந்து 12 ஆண்டுகளாகவே கோவிலுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறேன்.

Also Read: நீங்க ஜெயிலர் படம் பாக்குறதுக்கு முக்கியமான 8 காரணங்கள்.. நாளுக்கு நாள் எகிறும் இதயத்துடிப்பு

மேலும் அக்கோவில் குருக்களை எனக்கு நன்றாக தெரியும் அவர் ஒரு நல்ல மனிதர். அதை தொடர்ந்து குருக்கள் அணிந்திருந்த முருகன் டாலரை பார்த்த நான் எங்கு வாங்கினீர்கள் என கேட்டேன். அதற்கு ஃபாரினில் இருந்து வந்தது பா என அவர் சொன்னார். இந்த உரையாடல் நிகழ்ந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தான் அவை.

அதை வேண்டுமென்றே யாரோ இப்படி போட்டு பரப்பி கொண்டிருக்கின்றார்கள். அதுவும் இப்புகைப்படம் ஒன்றை மாதத்திற்கு முன்பே நடைபெற்றது எனவும் கூறினார். பொதுவாக நான் திருச்செந்தூர், திருத்தணி போன்ற முருகன் கோவிலுக்கு செல்லும் போது என்னை பார்த்து பேச முற்படுவோர்கள் ஏராளம்.

Also Read: அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை தூக்கிவிடும் சல்மான் கான்.. 2024-ஐ குறி வைத்த மெகா கூட்டணி

அவர்களுக்கு நான் என் நேரத்தை ஒதுக்கி பதில் அளிப்பதும் உண்டு. அவ்வாறு இருக்க 12 வருடங்களாக இந்த கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன், என்னிடம் ஆன்மீகம் சம்பந்தமாக பல விஷயங்களை குருக்கள் பகிர்ந்ததுண்டு. அதேபோல தான் அவரிடம் டாலரைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கும் போது அவற்றை தீண்டாமை காரணமாக குருக்கள் யோகி பாபுவிற்கு கைகொடுக்கவில்லை எனவும் கூறி வருகின்றனர். கோவிலுக்கு வந்து சாதி எல்லாம் பார்க்க வேண்டாம். கோவில் குருகளால் எந்த தீண்டாமையும் எனக்கு நடக்கவில்லை எனவும் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்