சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

வேலைக்காரி கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்ட பவித்ரா டீச்சர்.. அச்சு அசல் அப்படியே இருக்கீங்க மேடம்!

சினிமாக்காரர்களை விட தொலைக்காட்சி மற்றும் யூடியூப் போன்றவற்றில் பிரபலமாகும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் அதிகமாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பலரும் பல பேரை லட்சக்கணக்கில் பாலோ செய்து வருகின்றனர்.

அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பிளாக் ஷீப் என்ற யூடியூப் சேனல் மூலம் செம பிரபலமனவர் தான் நடிகை பிரிகிதா (பவித்ரா). டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அன்று முதல் இன்று வரை அவரை ரசிகர்கள் பவித்ரா டீச்சர் என்று அழைத்து வருகின்றனர். கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் அம்மணியை பார்த்து சைட் அடிக்காத ஆளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

யூடியூப் மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்ற ஆரம்பிக்கும் பவித்ரா, சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய கேரியரை வளர்த்துவரும் பவித்ரா தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் வெளியிடவும் தவறுவதில்லை. அந்த வகையில் வீட்டு பணியாளர் வேடத்தில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

மிகவும் சிம்பிளாக இருக்கும் புகைப்படத்தில் ரசிகர்களுக்கு என்ன கிடைத்ததோ தெரியவில்லை இந்த படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

pavithra-cinemapettai
pavithra-cinemapettai

Trending News