ஒரே பதிவில் கார்த்தி மானத்தை வாங்கிய ப்ளூ சட்டை.. ஃபாரின் பேருல படம் எடுத்தாலும் இப்படியா அசிங்கப்படுத்துரது!.

Blue Sattai Maran Controversy: தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேடித்தேடி நடிப்பவர்தான் நடிகர் கார்த்தி. இவருடைய படத்தை பற்றி பகிரங்கமாக அசிங்கப்படுத்தி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இவருடைய நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் தான் ஜப்பான். ஃபாரின் பேருல படம் எடுத்தாலும் கார்த்தியை இந்த அளவிற்கு அசிங்கப்படுத்தி இருக்கக் கூடாது.

இந்த ஜப்பான் படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் தங்க நகைகளை திருடி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முருகனின் கதைதான் கார்த்தி நடித்துள்ள ஜப்பான். முருகனுக்கு நீராவி என்ற பட்டப்பெயர் உண்டு. அந்த அளவிற்கு கொள்ளை சம்பவங்களை செய்துவிட்டு நீராவி போல் மறைந்து விடுவாராம்.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலுக்கு முருகன் தலைமை தாங்கினார். 2019 ஆம் ஆண்டு திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கோடி தங்க நகையை சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து கொள்ளையடித்தனர். அங்கு மட்டும் 30 கிலோ தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் பொருட்களை கொள்ளையடித்து சுருட்டினார். இதுவரை மொத்தமாக பல்வேறு திருட்டுகளின் மூலம் 100 கோடிக்கு சம்பாதித்து வைத்திருந்தார்.

Also Read: ஜாதியைப் பற்றி பெருமை பேசிய கார்த்தி, வசமாக சிக்கிய வீடியோ.. வெட்ட வெளிச்சமாக்கிய ப்ளூ சட்டை

இந்த திருட்டுக்கு பிறகு சரணடைந்த அவர், கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரித்த போது தான் தெலுங்கு சினிமா நடிகைகளுக்கு திருடிய பணத்தின் மூலம் ஆடம்பரமாக செலவு செய்திருக்கிறார். அதை அவர் சினிமாவில் முதலீடு செய்வதற்காகவே நினைத்து செய்துள்ளார்.

மேலும் முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் இவர் தமிழ் இளம் நடிகையுடன் அந்தரங்க உறவில் இருந்ததாக, போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இருப்பினும் இதற்கு முந்தைய வாக்குமூலங்களுடன் ஒப்பிடும்போது முருகனின் வாக்குமூலம் முரண்பட்டு இருந்ததால் காவல்துறை அதை நம்பவில்லை.

இவ்வாறு தென்னிந்தியாவை உலுக்கிய கொள்ளை கும்பலின் தலைவரான முருகனின் மீது சுமார் 80க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் 2020ல் உடல்நல குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். முருகனைப் பார்த்தால் ஒரு கொள்ளை கூட்டத்திற்கு தலைவன் போல் தெரியாது. சுள்ளான் போல் இருந்துகிட்டு போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய நீராவியின் கதை தான் இந்த ஜப்பான் படம். இந்த முழு கதையையும் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கார்த்தியை அசிங்கப்படுத்தி விட்டார்.

ப்ளூ சட்டை மாறன் ட்விட்

blue-sattai-twit-1-cinemapettai
blue-sattai-twit-1-cinemapettai

Also Read: கொந்தளித்து மேடையிலேயே கோவப்பட்ட அமீர்.. சூர்யா கார்த்தி சண்டையைக் கிண்டிய பிரஸ்மீட்

இந்த ட்விட்டர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. நாட்டிற்காக எவ்வளவோ நல்லது செய்த தலைவர்கள் இருக்கையில், இந்த திருட்டுப் பய கதையில் கார்த்தி நடிப்பதற்கு என்ன அவசியம் வந்துச்சு! என்றும் ரசிகர்கள் கருத்து பதிவிடுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்