கொந்தளித்து மேடையிலேயே கோவப்பட்ட அமீர்.. சூர்யா கார்த்தி சண்டையைக் கிண்டிய பிரஸ்மீட்

Director Ameer: என்னதான் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தாலும் அவர்கள் ஹீரோவாக இருந்தால் மட்டுமே மக்களிடத்தில் பரிச்சயமாக முடிகிறது. அதனாலயே தற்போது ஒவ்வொருவரும் ஹீரோவாக மாறிக்கொண்டு வருகிறார்கள். அதே மாதிரி இயக்குனர் அமீரும் அவ்வப்போது ஹீரோவாக அவருடைய முகத்தை காட்டிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் ரமேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மாயவலை படத்தில் அமீர் நடித்து வருகிறார்.

அப்பொழுது இப்படம் சம்பந்தமாக பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. அங்கே காரசாரமான பல விவாதங்கள் இருந்தது. அதில் அமீரிடம் பத்திரிக்கையாளர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு இடையான மனக்கசப்பு என்னவென்று கேட்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் தற்போது அசுர வளர்ச்சியை அடைந்திருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்றும் குண்டக்க மண்டகாண கேள்விகளை வைக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கு அமீர் இதுவரை பூட்டி வைத்திருந்த மொத்த ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக கொந்தளிப்புடன் பேசி இருக்கிறார். அதாவது சூர்யாவிற்கு மௌனம் பேசியதே மற்றும் கார்த்திக்கு பருத்திவீரன் போன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அவர்கள் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது நானும் தான்.

Also read: வாடிவாசலில் சூர்யாவுடன் இணையும் வடசென்னை பிரபலம்.. தரமான சம்பவத்திற்கு ரெடியான வெற்றிமாறன்

அப்படி இருக்கும் பொழுது இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் எங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம் என்னுடைய முரட்டுத்தனமான கோபமும் தான். இதைப் பற்றி வெளியே சொல்ல முடியாத அளவிற்கு பல விஷயங்கள் எங்களுக்குள் இருக்கிறது. ஆனாலும் அவர்களுடைய வளர்ச்சியை பார்ப்பதற்கு எனக்கு மிகப் பெரிய சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

இன்னொரு விஷயம் இந்த சினிமா துறையில் அண்ணன் தம்பியை வைத்து ஹிட் படத்தை கொடுத்த ஒரே இயக்குனர் நான்தான். இதன் காரணமாகவே இயக்குனர் வெற்றிமாறன் என்னிடம் வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பதற்கு உங்களுக்கு சம்மதமா என்று கொஞ்சம் தயக்கத்துடனே வந்து கேட்டார்.

ஆனால் அதற்கு என்னுடைய சம்மதத்தை உடனே கொடுத்து சூர்யாவுடன் நடிப்பதற்கு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி விட்டேன். அதே மாதிரி கார்த்திக்கின் 25வது படமான ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி பல வெற்றி இயக்குனர்களை பங்க்ஷனுக்கு அழைப்பு கொடுத்து இருக்கிறார். ஆனால் அவருக்கு அறிமுக நாயகனாக பருத்திவீரன் படத்தை கொடுத்த என்னை அந்த விழாவிற்கு கூப்பிடவில்லை என்று கோபத்துடன் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

Also read: ஜாதியைப் பற்றி பெருமை பேசிய கார்த்தி, வசமாக சிக்கிய வீடியோ.. வெட்ட வெளிச்சமாக்கிய ப்ளூ சட்டை