சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய்யை சீண்டிப் பார்க்கும் கலாநிதி.. லியோ போஸ்டரால் ஏற்பட்ட குழப்பம்

Vijay, kalanithi Maran: விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் இடையே பிரச்சனை இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தார்கள். இதை அடுத்து ரஜினி தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்த அடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதுவும் ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ரஜினியை புகழ்ந்து பேசும்போது விஜய்யை விமர்சிக்கும் படியாக கலாநிதி மாறன் சர்ச்சையாக பேசியது பரபரப்பை கிளப்பியது. அதோடு மட்டுமல்லாமல் இனி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விஜய் படம் பண்ண மாட்டார் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது லியோ ட்ரெய்லர் சாட்டிலைட் உரிமை சன் டிவி வசம் போய் உள்ளது.

Also Read : கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு.. தம்மா துண்டு இருந்துட்டு விஜய், ரஜினிகே டஃப் கொடுக்கும் ஜிவி பிரகாஷ்

அதாவது ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது அந்த வீடியோக்கள் மற்ற இணையத்தில் வெளியாக கூடாது என காப்பி ரைட்ஸ் வாங்கப்பட்டிருந்தது. அதேபோல் தான் இப்போது லியோ படத்தின் டிரைலர் சன் டிவி யூடியூப் தளத்தில் மட்டுமே வெளியாக இருக்கிறது. நாளை அக்டோபர் ஐந்து இந்த டிரைலர் வெளியாகிறது.

ஆனால் லியோவிலேயே விஜய்யை கலாநிதி மாறன் ஓரம் கட்டி இருக்கிறார். அதாவது சன் டிவி தளத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு போஸ்டர் உடன் வெளியிட்டு இருக்கின்றனர். பொதுவாக இது போன்ற அறிவிப்பு வெளியாகும் போது ஹீரோவின் போஸ்டரை வெளியிட்டு தான் ட்ரெய்லர் தேதியை அறிவிப்பார்.

Also Read : வெங்கட் பிரபு அண்ட் கோ-வை வெட்டிவிட்ட விஜய்.. தளபதி 68 காக செய்யும் தியாகம்

ஆனால் கலாநிதி மாறன் லியோ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் சஞ்சய் தத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். வேண்டுமென்றே விஜய்யை சீண்டி பார்க்க வேண்டும் என்று தான் இவ்வாறு கலாநிதி செய்துள்ளார் என சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இப்போது கொந்தளித்த உள்ளனர்.

ஆனால் அரசியல் பெரும் புள்ளிகள் முன்னால் விஜய்யால் ஏதும் செய்ய முடியாது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால் ஏற்கனவே லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காததற்கு உதயநிதி தான் காரணம் என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது. இப்போது திட்டம் போட்டு தான் லியோ ட்ரெய்லர் சேட்டிலைட் உரிமையையும் கலாநிதி வாங்கியுள்ளார் என்று பேசப்படுகிறது.

leo-trailer-poster
leo-trailer-poster

Also Read : அரசியலால் சினிமாவுக்கு வைக்கும் முற்றுப்புள்ளி.. விஜய் கடைசியாக நடிக்கும் படம்

- Advertisement -

Trending News