Vijay tv 5 Serial: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் விஜய் டிவியின் 5 சீரியலின் கதை.. இப்படியே போனா சன் டிவி டம்மி ஆகிடும் போல

Vijay tv 5 Serial Story line: என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான். அந்த வகையில் டிஆர்பியில் தூள் கிளப்பும் விதமாக சீரியல்களின் கதை பல சுவாரசியங்களுடன் அடுத்தடுத்து வர இருக்கிறது. அந்த சீரியல்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

நீ நான் காதல்: காதல் கதை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது என்பதற்கு ஏற்ப இரண்டு ஜோடிகளின் காதல் கதையை அழகாக காட்டப்பட்டு வருகிறது. அதில் அணு மற்றும் ஆகாஷ் காதல் ரொம்பவே சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு பாக்க ரொமான்டிக்காக காட்டப்பட்டு மக்களை கவர்ந்து வருகிறது. காதலுக்கு அழிவே இல்லை என்பதற்கு ஏற்ப அணு கழுத்தில் ஆகாஷ் தாலி கட்டி விடுகிறார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஆகாஷ் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பை தெரிவித்தாலும் வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்குள் ஏதாவது சண்டையை இழுத்து விட்டு இருவரையும் பிரிக்க வேண்டும் என்று சில சதி வேலைகள் நடக்கப் போகிறது. இதையெல்லாம் எப்படி முறியடித்து அணுவை பொக்கிஷமாக பார்த்துக் கொள்ளப் போகிறார் என்பது தான் ஆகாஷ்க்கு மிகப்பெரிய டாஸ்காக இருக்கப் போகிறது.

மகாநதி: மலையோரம் வீசும் காற்று மனசோடு கேக்குதா என்ற வரிகளுக்கு ஏற்ப காவிரியை தேடிக் கொண்டு தன்னந்தனியாக வருத்தத்துடன் விஜய் அலைந்து வருகிறார். ஆனால் இப்பொழுது தான் காவிரியின் அருமையும் அவர் மீது தனக்கு இருக்கும் காதலையும் விஜய் புரிந்துகொள்ள தருணமாக அமைந்து இருக்கிறது. அந்த வகையில் இனி காவிரியை கண்டுபிடித்தால் கூட எந்த காரணத்தை கொண்டும் விஜய் பிரிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்.

வீட்டுக்கு வீடு வாசப்படி: காதலிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது ஆனால் அதே காதலை வீட்டில் சொல்லி சம்மதம் வாங்குவது கஷ்டமாக இருக்கிறது அஜய்க்கு. அதனால் இவரை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்று களத்தில் குதித்த அஞ்சலி எடுத்த முடிவால் தற்போது அஜய்க்கும் பல்லவிக்கும் நடக்க இருந்த திருமணம் நின்று போய்விட்டது. ஆனால் அதற்கு பதிலாக பாவம் பல்லவி இடம் அஜய் தம்பி கண்ணன் மாட்டிக் கொண்டார்.

சின்ன மருமகள்: பள்ளிக்கூடம் படிக்கிற பெண்ணை வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ணி தன்னுடைய கனவை மறக்கடிக்கும் வகையில் காதல் ரொமான்டிக்கில் புகுந்து விளையாடுகிறார் சேது. தமிழும் தற்போது அவருடைய கனவை மறந்து சேது மீது ஆசைப்பட்டு வருகிறார். தற்போது இவர்கள் இருவருடைய காதல் நெருங்கிய நிலையில் பூகம்பமாக சேதுக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வரப்போகிறது.

பிறகு தமிழை வீட்டை விட்டு துரத்தி சேது ஒரு பக்கம் வருத்தப்பட போகிறார். இன்னொரு பக்கம் சேதுவை நினைத்து கனவை மறந்து தமிழ் இங்கே அவஸ்தைப்பட போகிறார்.

சக்திவேல்: சக்தி மீது இருந்த ஒரே ஆசையின் காரணமாக தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை என்று வலு கட்டாயமாக வேலு அவரை கல்யாணம் பண்ணினார். ஆனால் தற்போது சக்தி மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து புருஷனாக வேலு இடம் பிடித்து விட்டார். இந்த நிலையில் குடும்பத்தில் இருப்பவர்களும் வேலுவை மருமகனாக ஏற்றுக் கொண்டார்கள்.

அந்த வகையில் சக்தியின் தங்கைக்கு ஏற்பட்ட சிக்கலில் இருந்து தைரியமாக வேலும் சக்தியும் சேர்ந்தும் காப்பாற்றி விட்டார்கள். இதனை அடுத்து இவர்கள் ஒன்று சேர நினைக்கும் பொழுது ரவுடி கும்பலால் வேலுக்கு வரப்போகும் ஆபத்திலிருந்து சிக்கிக் கொள்ளாமல் எப்படி தப்பிக்கப் போகிறார் என்பது தான் ட்விஸ்ட்டாக இருக்கப் போகிறது.

இப்படி விஜய் டிவியில் வருகின்ற சீரியல்கள் அனைத்தும் ரொம்பவே விறுவிறுப்பாகவும் பார்க்க ஆவலாகவும் இருந்து வருகிறது. இப்படியே போனால் கூடிய சீக்கிரத்தில் சன் டிவி சீரியல் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் போல.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்