ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சரசரவென குவியும் ஓட்டு.. 2ம் இடத்துக்கு முன்னேறிய போட்டியாளர், பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்

Biggboss 7 : பிக்பாஸ் ஓட்டு நிலவரம் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. மாயா, அர்ச்சனா ஆகியோர்களுக்காக தனி பி.ஆர் டீம் தீயாக இறங்கி ஓட்டு வேட்டை நடத்தி வருகிறது. இதனால் சோசியல் மீடியாவே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் எதிர்பாராத விதமாக மணி ஓட்டு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஓட்டுக்களை தான் விஜய் டிவி கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

அதன் அடிப்படையில் மணி தற்போது இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறி இருப்பதாக நம்பிக்கையான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. இது சேனல் தரப்புக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கிறதாம்.

Also read: டைட்டில் வின்னர் கனவு வீணா போச்சு.. பிக்பாஸை விட்டு திடுதிப்புன்னு வெளியேறும் போட்டியாளர் இவர்தான்

இருந்தாலும் ஓட்டு எண்ணிக்கை கடைசி நிமிடத்தில் கூட மாறும் என்கின்றனர். ஆனால் இது எப்படி சாத்தியம் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஏனென்றால் மணியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது மாயா, தினேஷ் இருவரும் முடிந்த அளவு சிறப்பான பங்கை கொடுத்திருக்கின்றனர்.

அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை அதனாலேயே மணிக்கு கிடைக்கும் ஓட்டுக்கு பின்னால் வேறு யாரும் இருக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உண்மையில் ரவீனாவின் வெளியேற்றத்திற்கு பிறகு தான் மணிக்கு ஓட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

அதன்படி ரவீனா தன்னுடைய நட்பு வட்டாரம் முதல் ரசிகர்கள் வரை அனைவரிடமும் மணிக்கு ஆதரவாக ஓட்டு வேட்டை நடத்தி வருவதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் ஃபைனலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் இந்த நிலையில் மாறுதல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

Also read: என் நகையை அவன் திருடிட்டான்.. மேல்வர்க்க திமிரைக் காட்டிய பிக்பாஸ் அனன்யா

- Advertisement -

Trending News