ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

என் நகையை அவன் திருடிட்டான்.. மேல்வர்க்க திமிரைக் காட்டிய பிக்பாஸ் அனன்யா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் இரு நாட்கள் தான் இருக்கிறது. ஆனால் கடைசி நேரம் வரை ஏதாவது ஒரு அக்கப்போர் வீட்டுக்குள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது சேனல் தரப்புக்கு பின்னடைவாகவே இருக்கிறது.

அந்த வகையில் கெஸ்ட் ஆக வந்திருக்கும் அனன்யா கூட்டிய ஏழரை தான் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏதோ மாமியார் வீட்டுக்கு வருவது போல் அவ்வப்போது தலையை காட்டிக் கொண்டிருக்கும் இவர் இப்போது தன் மேல் வர்க்க திமிரை காட்டி இருக்கிறார்.

மாயாவின் அடிமைகளில் ஒருவரான இவர் தன்னுடைய நகையை காணும் என பிக்பாஸ் வீட்டுக்குள் புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய நகையை டெலிவரி பாய் தான் எடுத்திருக்க வேண்டும் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

Also read: தீயாக நடக்கும் ஓட்டு வேட்டை.. பிக்பாஸ் வரலாற்றை புரட்டிப் போடும் அர்ச்சனா

அதைக் கேட்ட மாயா அந்த நகை ரொம்பவும் விலை உயர்ந்ததா என கேட்கிறார். அதற்கு அவர் என்னுடைய நகை அல்ல வேற ஒருத்தவங்களோடது என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் அனன்யா கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஒரு விஷயம் என்ன ஏதுன்னு தெரியாமலேயே தொழிலாளர் வர்க்கத்தின் மேல் பழி போடுவது தான் அனன்யா போன்ற ஆட்களின் வேலை. இதன் மூலம் அவருடைய பணக்கார திமிர் வெளிப்பட்டுள்ளது. உங்களை யார் இந்த வீட்டுக்குள்ள கூப்பிட்டது என ஆடியன்ஸ் நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Also read: டைட்டில் வின்னர் கனவு வீணா போச்சு.. பிக்பாஸை விட்டு திடுதிப்புன்னு வெளியேறும் போட்டியாளர் இவர்தான்

- Advertisement -

Trending News