புதன்கிழமை, நவம்பர் 13, 2024

டைட்டில் வின்னரானது விஜய் டிவியால் தான்.. முதல் பேட்டியிலேயே மொத்தத்தையும் உளறிய அர்ச்சனா

Bigg Boss Season 7 Title Winner Archana’s Open Talk: போன வருடம் அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது. இதில் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா தான் டைட்டிலை தட்டி தூக்கினார். இரண்டாவது இடத்தில் மணியும், மூன்றாவது இடத்தில் மாயாவும், நான்காவது இடத்தில் தினேஷ், இறுதிப் போட்டிக்கு நேரடியாக டிக்கெட் வென்ற விஷ்ணு ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.

வழக்கமாக விஜய் டிவி பிரபலங்களுக்கு தான் டைட்டிலைத் தூக்கிக் கொடுப்பார்கள் என ரசிகர்களின் மத்தியில் ஏற்கனவே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இப்போது டைட்டில் வின்னர் அர்ச்சனா, அதை ஓபன் ஆகுவே ஒத்துக் கொண்டுள்ளார். விஜய் டிவியால்தான் எனக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் கிடைத்தது என அவர் அளித்த முதல் பேட்டியில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

விஜய் டிவி அர்ச்சனாவிற்கு டிராஃபியுடன் 50 லட்சத்திற்கான காசோலையும், 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை, கார் அதோடு பைனல் லிஸ்டில் இருந்த ஐந்து பேருக்கு 5 லட்சம் என, நிறையவே அள்ளிக் கொடுத்திருக்கிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் தான் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.

Also Read: சீசன் 7 துவக்கத்திலிருந்து, இறுதிவரை நடந்த சுவாரஸ்யம்.. ஐந்து ஃபைனல் லிஸ்ட்க்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் பரிசு

டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் ஓபன் டாக்

அந்த சீரியலில் திடீரென்று விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்திருக்கிறாராம். விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் வாய்ப்பு கொடுத்தது போல், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தது. இந்த வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைத்திடாது. அதை போல் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலால் தான் இப்போது எனக்கு பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் கிடைத்திருக்கிறது என்று அர்ச்சனா கூறியுள்ளார்.

அந்த சீரியலில் இயக்குனர் பிரவீன் பெனடிக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது அர்ச்சனாவிற்கு சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும், நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் குவிகிறது. ஏற்கனவே அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனது வனிதா போன்றவர்களால் ஜீரணிக்க முடியாமல் கொந்தளிக்கின்ற நிலையில், அர்ச்சனாவே தன்னுடைய வாயால் விஜய் டிவியால் தான் டைட்டில் கிடைத்திருக்கிறது என சொன்னது பெரும் சர்ச்சை ஆகிறது.

Also Read: இந்த 5 காரணங்களால் மட்டுமே டைட்டில் வின்னர் ஆகிய அர்ச்சனா.. ஆனாலும் இதில் தோல்வி தான்

- Advertisement -spot_img

Trending News