பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் மொத்த சம்பளம்.. ஸ்பெஷலா கவனிச்சு அனுப்பிய விஜய் டிவி

Bigg Boss Season 7 Title Winner Archana total Salary: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் முதல் முதலாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த அர்ச்சனா, டைட்டில் வின்னர் ஆகி வரலாற்று சாதனை படைத்தார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் 28-வது நாள் தான் நுழைந்தார். 105 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் வின்னரான அர்ச்சனா எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைக்கிறது.

மொத்தம் 77 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அர்ச்சனாவிற்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி பார்த்தால் மொத்தம் 105 நாட்கள் வீட்டிலிருந்த அர்ச்சனா-விற்கு சம்பளம் மட்டுமே 13 லட்சத்து 86 ஆயிரம். அதைத் தவிர டைட்டில் வின்னரான அர்ச்சனா-விற்கு 50 லட்சம் பரிசு தொகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு கூடுதலாக விஜய் டிவி அர்ச்சனாவை நல்லாவே கவனித்து அனுப்பி இருக்கின்றனர்.

இவரால்தான் இந்த சீசன் செம ஃபேமஸ் ஆனதால், கூடுதலாக 5 லட்சத்தை விஜய் டிவி தூக்கிக் கொடுத்துள்ளது. அது மட்டுமல்ல இதுவரை எந்த சீசனின் டைட்டில் வின்னருக்கும் கிடைத்திறாத ஸ்பெஷல் பரிசும் அர்ச்சனாவிற்கு கிடைத்துள்ளது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ஸ்பான்சர், ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் டைட்டில் வின்னர் அர்ச்சனாவிற்கு 15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை பரிசாக கொடுத்திருக்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா.. பரிசுத்தொகை 50 லட்சத்தொடு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த விஜய் டிவி

டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் மொத்த சம்பளம்

இதுவரை மற்ற எந்த சீசன்களிலும் இப்படி ஒரு பரிசை விளம்பர நிறுவனம் கொடுத்ததில்லை. அதேபோல் ஒவ்வொரு முறையும் எலிமினேட் ஆகும் போட்டியாளர்களை வெளியே செல்லும்போது விட்டாரா (Vitara) காரில் தான் அனுப்பி வைப்பார்கள். கடைசியாக அந்த நிறுவனத்தில் இருந்து விலை உயர்ந்த புத்தம் புது காரையும் அர்ச்சனாவிற்கு வழங்கி உள்ளனர்.

சம்பளம் ஒரு பக்கம், பரிசுத்தொகை 50 லட்சம் மறுபக்கம், அதோடு கூடுதலாக 5 லட்சம், கார், நிலம் என அர்ச்சனா தன்னுடைய வீட்டிற்கு போகும் போது கை நிறைய எடுத்து சென்று இருக்கிறார். ஒரே ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு அர்ச்சனா தன்னுடைய வீட்டு கஜானாவையே கச்சிதமாக நிரப்பி விட்டார்.

Also Read: எதிர்நீச்சல் சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவி செய்த உருப்படியான விஷயம்.. டிஆர்பி-யில் ஜொலிக்கும் சீரியல்

- Advertisement -spot_img

Trending News