பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா.. பரிசுத்தொகை 50 லட்சத்தொடு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த விஜய் டிவி

Bigg Boss season 7 title winner Archana: இதுவரை நடந்த எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதன் முதலாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த போட்டியாளர் தான் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆகியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.  பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட 28-வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா, இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகி டிராபியை கையில் ஏந்தி உள்ளார்.

இவருக்கு டிராபி மட்டுமல்ல பரிசுத் தொகை 50 லட்சமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான அர்ச்சனாவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றையும் கொடுத்து இருக்கின்றனர். போன சீசனின் டைட்டில் வின்னர் ராஜுக்கு கொடுக்கப்பட்டது போலவே, இந்த சீசனிலும் டைட்டில் வின்னர் அர்ச்சனாவிற்கு ஸ்பெஷலாக விலை உயர்ந்த காரை சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்திருக்கின்றனர்.

Also Read: பிக் பாஸ் 7 டைட்டிலை தட்டி தூக்கியது இவர்தான்.. போட்ட கணிப்பு மொத்தமும் போச்சு, இணையத்தில் கசிந்த தகவல்

டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு கிடைத்த மொத்த தொகை

அதோடு அர்ச்சனா, பிக் பாஸ் வீட்டில் 77 நாட்கள் இருந்த நிலையில் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. மொத்தமாக அர்ச்சனாவிற்கு ரூபாய் 13,86,000 பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை 50 லட்சத்தோடு சேர்த்தால், மொத்தம் கார் உடன் ரூபாய் 63 லட்சத்து 86 ஆயிரத்தை அர்ச்சனா தன்னுடைய வீட்டிற்கு எடுத்து செல்கிறார்.

ஒரே ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு, தன்னுடைய வீட்டுக்கு கஜானாவை அர்ச்சனா நிரம்பி வழிய செய்துவிட்டார். மேலும் அர்ச்சனாவை தொடர்ந்து, இரண்டாவது இடம் மணி சந்திராவிற்கும், மூன்றாவது இடம் மாயாவுக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிடைத்துள்ளது.

டாப் 5 லிஸ்டில் இருந்த தினேஷ், விஷ்ணு மக்கள் அளித்த குறைந்த ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். இன்று ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் தெரிய வேண்டிய விஷயம் எல்லாம் இப்போதே தெரிந்து விட்டது. இதனால் ரசிகர்களும் அர்ச்சனாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவிக்கின்றனர்.

Also Read: உறுதியானது பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர்.. இரண்டாவது இடம் கூட சூனியக் கிழவிக்கு கிடைக்காமல் போச்சே.!

- Advertisement -spot_img

Trending News