வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 பேர்.. போனவாரம் மிஸ் ஆயிடுச்சு, இந்த வாரம் கண்டிப்பா ஸ்கெட்ச் உனக்குத்தான்

BB7 3rd Week Nomination List: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சீசனில் எப்போதுமே பரபரப்புக்கும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சீசனை தான் எதிர்பார்த்தேன் என்று பிக் பாஸே சொல்லும் அளவிற்கு போட்டியாளர்கள் கண்டன்டுக்கு மேல் கன்டென்ட் கொடுத்து வருகிறார்கள்.

20 போட்டியாளர்களுடன் களம் கண்ட பிக் பாஸ் ஏழாவது சீசனில், முதல் எலிமினேஷன் ஆக அனன்யா ராவ் வெளியேறினார். மேலும் எழுத்தாளர் மற்றும் நடிகர் பவா செல்லதுரை தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இவருடைய வெளியேற்றத்தால் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என விஜய் தொலைக்காட்சி அறிவித்துவிட்டது. இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் கமலஹாசன் போட்டியாளர்களை சிறப்பாக சம்பவம் செய்தார். ஸ்மால் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் நடத்திய ஸ்டிரைக் பற்றி கமல் வறுத்தெடுத்து விட்டார். மேலும் மாயாவை ஆடியன்ஸ் உடன் சேர்ந்து கலாய்த்தது ரசிக்கும் அளவிற்கு இருந்தது. அதே நேரத்தில் வீட்டின் நிறைகள் மற்றும் குறைகளை தெள்ளத் தெளிவாக அலசி விட்டிருந்தார் ஆண்டவர்.

இன்று மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. அதற்கு முன்பே காலையிலிருந்து மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து இவர்கள் யாரை நாமினேஷன் செய்ய வேண்டும், இவர்களை யார் நாமினேஷன் செய்வார்கள் என பேசிக்கொண்டிருந்தார்கள். நாமினேஷன் பற்றி ஒருவருக்கொருவர் டிஸ்கஸ் செய்யக்கூடாது என்பது பிக் பாஸ் ரூலில் இருக்கிறது. இவர்கள் இருவரும் இப்போது அதையும் மீறி இருக்கிறார்கள்.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மாயா, மணி, பூர்ணிமா, பிரதீப், விசித்ரா, ஐஷு ஆகியோர் இருக்கிறார்கள். இதில் கண்டிப்பாக பிரதீப் முதலிலேயே சேவ் ஆகிவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வயதானவர்களைத்தான் முதலில் எலிமினேட் செய்வார்கள் என்று இருந்த பிக் பாஸ் இலக்கணத்தையே விசித்ரா மாற்றி இருக்கிறார். கண்டிப்பாக விசித்திரா வெளியில் போக வாய்ப்பே இல்லை.

மாயா மற்றும் பூர்ணிமா சேவ் ஆகி, மணி மற்றும் ஐஷு இருவருக்குள் ஒருவர் வெளியேறுவது என்பது கனவிலும் நடக்காத விஷயம். இப்போது மோஸ்ட் வாண்டட் லிஸ்டில் இருப்பவர்கள் என்றால் அது மாயா மற்றும் பூர்ணிமா தான். மாயா ஏற்கனவே கர்ணம் தப்பினால் மரணம் என்றுதான் இந்த வாரம் வீட்டிற்குள் இருக்கிறார். எனவே கண்டிப்பாக மாயா தான் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

Trending News