சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூனியம்.. வெறுப்பை சம்பாதிச்சு முதல் ஆளாக வெளியேறும் போட்டியாளர்

Bigg Boss Season 7: விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே மற்ற தொலைக்காட்சியில் உள்ள தொடர்கள் நேரம் மாற்றப்பட்டு வருகிறது. ஏனென்றால் டிஆர்பி அதிக ரேட்டிங் பெற்ற தொடர்கள் ஒன்பதரை மணிக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் கண்டிப்பாக இவர்களது டிஆர்பி குறைய வாய்ப்பிருக்கிறது.

இப்படி இருக்கும் சூழலில் இந்த முறை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தெரிந்த முகங்கள் நிறைய இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை பிரபலங்களாக விஷ்ணு, சரவணா, ரவீனா, விசித்ரா ஆகியோர் பங்கு பெற்று இருக்கின்றனர். மேலும் கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி போன்றவர்களும் பரிச்சயமானவர்கள் தான்.

Also Read : சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்கும் கொளுத்தி போட்டு வேடிக்கை காட்டும் பிக் பாஸ்.. ரெண்டே நாளில் எதிரப்போகும் டிஆர்பி

இந்நிலையில் முந்தைய பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களையே சிலர் ஃபாலோ செய்வார்கள். அப்படிதான் கடந்த சீசன்களில் பங்கு பெற்ற பாலா மற்றும் அசீம் போன்றோரை பிரதிபலிக்கும் விதமாக பிரதீப் ஆண்டனி நடந்து வருகிறார். அதாவது அருவி, டாடா, வாழ் போன்ற படங்களில் நடித்தவர்தான் பிரதீப்.

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கவின் நண்பராக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார். அசீம், பாலா போன்ற பிரபலங்கள் எப்படி கொஞ்சம் தன்னுடைய பேச்சி முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்களோ அதே போல் தான் பிரதீப்பும் நடந்து கொண்டு வருகிறார்.

Also Read : முதலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும் டம்மி பீஸ்.. நான் எந்த வம்பு தும்புக்கும் போகலயே, எப்புட்றா!

ஆரம்பம் முதலே எடாகூடமான பேச்சால் சண்டையை ஆரம்பித்து விட்டார். மேலும் இந்த வார கேப்டனாக இருக்கும் விஜய் உடனும் ஏழரை ஆரம்பித்து விட்டார். எனவே பிரதீப்பின் பேச்சை மற்றும் செயல் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதமாகத்தான் உள்ளது. அதுவும் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார்.

இதனால் பிக் பாஸ் சீசன் 7 முதல் வாரமே பிரதீப் ஆண்டனி வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்போதுமே ஒரு வாரம் சென்ற பிறகுதான் பிரபலங்களின் நடவடிக்கை பார்த்து ரசிகர்கள் வாக்கு போடுவார்கள். ஆனால் முதல் நாளே பிரதீப் எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

Also Read : அட்ராசக்க! புது குணசேகரன் வந்தது ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.. பிக் பாஸ் காட்டிய பயத்தால் சன் டிவி எடுத்த முடிவு

- Advertisement -

Trending News