சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முதலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும் டம்மி பீஸ்.. நான் எந்த வம்பு தும்புக்கும் போகலயே, எப்புட்றா!

Bigg Boss 7: பொதுவாக பக்கத்து வீட்ல சண்டை நடந்தாலே வேடிக்கை பார்ப்பதற்கு ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். அதிலும் தினமும் நம் வீட்டில் இருந்தபடியே சண்டையை பார்க்கலாம் என்றால் அது ஒரு தனி சுகம் தான். அதை தான் கடந்த ஆறு வருடமாக விஜய் டிவி பிக் பாஸ் மூலம் நமக்கு கொடுத்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது சீசன் 7 ஆரம்பமாகி அனைவரது கவனத்தையும் திருப்பி விட்டது.

அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் இரண்டு விதமாக நாமினேஷன் நடைபெற்றது. இரண்டு வீடாக பிரித்து தனித்தனியாக நாமினேட் செய்யும் படி பிக் பாஸ் ஆர்டர் போட்டிருக்கிறது. பொதுவாக இதுவரை நடந்த பிக் பாஸில் குறைந்தபட்சமாக ஒரு வாரம் அவர்களை சந்தோஷமாக வைத்து அதன் பின்னே கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கும்.

Also read: பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இந்த மூணு பேர்ல ஒருத்தர் தான்.. கவின் விட்டதை பிடிக்கும் உயிர் நண்பன்

ஆனால் இப்பொழுது இதற்கு எதிர்மாறாக வீட்டிற்குள் அனுப்பிய போதே கையில் பாமையும் கொடுத்து பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது. அதாவது முதலில் போகும் போட்டியாளர்கள் அடுத்து வரும் நபரிடம் பேசி தலைவர் பதவியை வாங்கிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து 18 போட்டியாளர்கள் செய்து வந்த நிலையில் கடைசியாக தலைவர் பதவி விஜய் வர்மாவிற்கு கிடைத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஐசு, அனன்யா, ரவீனா, யுகேந்திரன், பிரதீப், பவா செல்லதுரை மற்றும் ஜோவிகா நாமினேட் ஆகிருக்கிறார்கள். இதற்கிடையில் இவர்கள் அனைவரும் சந்தித்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தொடர்ந்து அதிக குற்றச்சாட்டுகளை வைத்து நாமினேட் செய்திருக்கிறார்கள். எப்போதுமே முதல் வாரம் எலிமினேஷன் கிடையாது என்று தான் பிக் பாஸ் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும்.

Also read: முதல் நாளே பத்த வச்சிட்டியே பரட்டை பிக் பாஸ்.. 2வது வீட்டிற்கு துரத்தி விடப்பட்ட 6 போட்டியாளர்கள்

ஆனால் அது எதுவுமே தற்போது இல்லாமல் முதல் வாரத்திலேயே எலிமினேஷன் உண்டு என்று அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் தான் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஓட்டுக் கணிப்பு நடந்து வருகிறது. இதில் ரவீனா தற்போது வரை 32.5% வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

அடுத்தபடியாக ஐசு, பவா செல்லத்துரை மற்றும் ஜோவிகா ஆகியோர் அடுத்தடுத்து வாக்குகளை பெற்று ஷேப் ஜோனர்க்கு போய் விட்டார்கள். இதில் கம்மியான வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கும் இரண்டு நபர்கள் பிரதீப் மற்றும் யுகேந்திரன். அதிலும் யுகேந்திரன் 6.67% வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதால் இவர் முதலில் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவரைப் பொறுத்தவரை இதுவரை எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் இருக்கிறார். இருந்தாலும் எப்போதுமே டம்மி பீஸ் தான் முதலில் போவார்கள். அந்த வகையில் இவர் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

Also read: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்.. அட இவங்க ரெண்டு பேரும் நிஜமான காதல் ஜோடியா!

- Advertisement -

Trending News