Ethirneechal: கமுக்கமாக இருந்து தில்லாலங்கடி வேலையை பார்த்த குணசேகரன்.. குடும்பத்தில் ரணகளத்தை ஏற்படுத்த போகும் ரேணுகா

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், முதல்முறையாக குணசேகரன் வீட்டு மருமகள்கள் ஜெயித்து விட்டார்கள். இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி சொந்த காலில் நின்னு வெற்றியை பார்க்கலாம் என முடிவு எடுத்தார்கள். ஆனால் அடிபட்ட பாம்பு பதுங்கி நின்னு கொத்தும் என்று சொல்வது போல் குணசேகரன் தந்திரமாக காய் நகர்த்துகிறார்.

அதாவது குணசேகரன் பொருத்தவரை தனக்கு ஒரு கண்ணு போனா, எதிரிக்கு இரண்டு கண்ணும் போனும் என்று நினைக்கக் கூடியவர். அப்படிப்பட்டவர் எங்கே மருமகள்கள் வெளியே போய்விட்டால் நமக்கு முன்னாடி வளர்ந்து விடுவார்களோ என்ற பயத்தால் வீட்டிற்குள்ளேயே வைப்பதற்கு முடிவு பண்ணி விட்டார்.

அதற்கு துருப்புச் சீட்டு ஆகத்தான் பல விஷயங்களை மைண்ட் வாய்ஸ் நினைத்து அனைத்தையும் ஓபனாக பேசி அங்கே இருப்பவர்களை குழப்பி விட்டார். அந்த வகையில் உங்கள் விஷயத்தில் நான் இனி தலையிட மாட்டேன். நீங்கள் ஜெயிக்கணும் எங்களால் எல்லாத்தையும் சாதிக்க முடியும் என்று சொன்னது உண்மை என்றால் அதை இந்த வீட்டில் இருந்தே நீங்கள் செய்து காட்ட வேண்டும் என்று சவால் விடுகிறார்.

குணசேகரனின் அசால்ட் தைரியம்

எப்படியோ மருமகள்களின் கௌரவத்தை சீண்டிப் பார்த்து அவர்களை அந்த வீட்டிலேயே அடக்கி விட்டார். குணசேகருக்கு என்ன தைரியம் என்றால் கொஞ்சம் காசு பணம் வந்து விட்டால் இவர்களிடம் ஒற்றுமை இருக்காது. குழாயடி சண்டை தான் நடக்கும் அதன் மூலம் நாம் குளிர் காய் எல்லாம் என்ற அசால்ட் தைரியத்தில் ஒரு சவாலை போட்டு விட்டார்.

இது தெரியாமல் வழக்கம்போல் அந்த வீட்டு மருமகள்கள் அங்கேயே முடங்குவதற்கு முடிவெடுத்து விட்டார்கள். ஒரே வீட்டிலேயே இருந்து கும்மியடித்து நம் ஒற்றுமையாக இருந்து ஜெயித்து காட்டுவோம் என நினைக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ஜனனி, நாம் ஒவ்வொருவரும் ஆசைப்பட்ட மாதிரி நம்முடைய வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் லட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

அதில் நம் ஒற்றுமையாக இருந்து ஒவ்வொருவருக்கும் சப்போர்ட் செய்து வந்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று உறுதுணையாக பேசுகிறார். அதே மாதிரி ஜனனி சொன்னதற்கும் அனைவரும் தலையாட்டிக் விட்டார்கள். அடுத்ததாக ஞானம், ரேணுகாவிடம் மீதி இருக்கும் பணத்தை வாங்கிட்டு கருவாடு பிசினஸில் போடுவதற்கு கிளம்பி விட்டார்.

இதைப்பற்றி ரேணுகா கேட்டதும் ஞானம் வழக்கம்போல் என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கு இருப்பவர்களின் வாயை அடைக்கிறார். கடைசியில் ஞானத்தால் ஒண்ணுமே பண்ண முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிசினஸில் யாரையோ நம்பி ஏமாறப் போகிறார். இதனால் ரேணுகா மூலம் குடும்பத்தில் ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது.

இதுதான் ஆரம்பம் என்று சொல்லும் அளவிற்கு ரேணுகா செய்யும் ரணகளத்தால் குடும்பமே இரண்டாக பிரியப் போகிறது. இதை குணசேகரன் கண்குளிராக இருந்து வேடிக்கை பார்க்க போகிறார். பிறகு கொஞ்சம் காசு பணத்தை பார்த்ததும் போட்டி பொறாமை வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

கடைசியில் சொந்த கல்லில் நின்னு ஜெயிக்கிறார்களோ இல்லையோ சொந்தங்களே இல்லாமல் தனி மரமாக நிற்கப் போகிறார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் கதையாக அமையப் போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்