Bigg Boss Archana: பிக் பாஸ் என்றாலே சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு பார்ப்பவர்களை என்டர்டைன்மென்ட் படுத்தும் ஒரு ரியாலிட்டி ஷோ. அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த சீசன் 7 பற்றி சொல்லவே வேண்டாம். வாய்க்கா தகராறும், குழாயடி சண்டைக்கும் பெயர் போன நிகழ்ச்சியாகவே பிரபலமாகிவிட்டது.
முக்கியமாக வைல்டு கார்டு மூலம் அர்ச்சனா போன பிறகுதான் அந்த நிகழ்ச்சியை சூடு பிடிக்க ஆரம்பித்தது. எல்லாரும் சேர்ந்து ஒருதலைப் பட்சமாக அர்ச்சனாவை டார்கெட் பண்ணும் பொழுது தனியாக நின்னு ஒவ்வொருவரையும் ஓட ஓட விரட்டினார்.
அந்த அளவிற்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கடைசி வரை நின்னு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். பின்னர் டைட்டில் வின்னர் கோப்பை, 50 லட்ச ரூபாய் காசோலை மற்றும் ஒரு கார் ஆகியவை பரிசாக பெற்றார். ஆனால் அடுத்தடுத்து எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் சுற்றி வருகிறார்.
ஆனால் சும்மா தனியாக சுத்த கூடாது என்பதற்காக பிக் பாஸ் அர்ச்சனா அவருடைய காதலுடன் சேர்ந்து தான் சுற்றி வருகிறார். இவர் பிக் பாஸ் போன நிலையிலேயே இவருடைய காதலன் இவர்தான் என்று சமூக வலைதளங்களில் காதலன் புகைப்படம் வெளிவந்தது. ஆனாலும் இதுவரை இவர்கள் இருவரும் வாயை திறந்து நாங்கள் காதலர்கள் என்று ஓபனாக சொன்னதில்லை.
போட்டிங் புகைப்படம்

அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் முதன்முதலாக சமூக வலைதளங்களில் வெளியாயிருக்கிறது. இவர்கள் இருவரும் ஏற்காட்டில் போட்டில் சுற்றி வருகிற போட்டோ மற்றும் காரில் போகிற வீடியோ அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காதலன் வேறு யாருமில்லை பாரதி கண்ணம்மா சீசன் 1 சீரியலில் நடித்த டாக்டர் பாரதி என்கிற அருண்பிரசாத்.
அர்ச்சனாவின் காதலன் அருண் பிரசாத்

இவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் போட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தற்போது இதில் நான் ரொம்பவே பிஸியாக இருக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். அதே மாதிரி அர்ச்சனாவும் ஏற்காட்டுக்கு போயி போட்டிங் போன புகைப்படத்தை வெளியிட்டு கமுக்கமாக காதலை பரிமாறி இருக்கிறார்கள்.
அர்ச்சனாவும் அருண்பிரசாந்தும் காரில் எடுத்த புகைப்படம்

இவர்களுடைய காதல் ஆர்ப்பாட்டமே இல்லாத ஜோடி புறாக்களாக உருகி உருகி காதலித்து வருகிறார்கள். அந்த வகையில் கூடிய விரைவில் இவர்களுடைய காதல் அடுத்த கட்ட கல்யாணத்தில் முடியும் தருவாயில் வாயைத் திறந்து நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்கிற விஷயத்தை போட்டு உடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.