வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இந்த வார எலிமினேஷனில் பிக் பாஸ் வச்ச பெரிய டிவிஸ்ட்.. வழக்கம் போல ஆரம்பித்த நாரதர் வேலை

Bigg Boss 7 2nd Week Elimination: அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தாலே நமக்கு இருக்கும் பாதி பிரச்சனைகள் மறந்து விடும் என்ற கான்செப்ட்டை வைத்து உருவாக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக தமிழ்நாட்டில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இப்போது கடந்த வாரம் இதன் ஏழாவது சீசனும் தொடங்கப்பட்டது. கொஞ்சம் ஆற போட்டாலும் டிஆர்பியை இழந்து விடுவோம் என்று முதல் நாளிலிருந்து சேட்டையை ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ்.

பெரிய பிக் பாஸ் மற்றும் சின்ன பிக் பாஸ் என இரண்டு வீடுகளாக பிரித்த நிலையில் சுவாரசியம் இல்லாதவர்கள் என்று சொல்லி ஒரு ஆறு பேரை சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்புகிறேன் என்ற பெயரில் பிரச்சனை காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இதுவரை நடந்த சீசனில் இருந்தவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்கிறார்கள்.

எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது. ஆனால் இந்த சீசனில் முதல் வாரமே மாடல் நடிகை அனன்யா ராவ் தன்னுடைய விளையாட்டை ஆரம்பிப்பதற்கு முன்பே வெளியே அனுப்பப்பட்டார். அவரை தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று சொல்லி வெளியே சென்று விட்டார். தற்போது மொத்தம் 16 பேர் தான் இந்த வீட்டில் இருக்கிறார்கள்.

இந்த வாரம் விசித்ரா, ஜோவிகா, மாயா, பிரதீப், பூர்ணிமா, அக்‌ஷயா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் எவிக்ஷனுக்காக நாமினேஷன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் புறம் பேசுவதை மட்டுமே பிழைப்பாக வைத்திருக்கும் மாயாவை எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு மற்றவர்களுக்கு ஓட்டு போட்டு கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் வழக்கமான தன்னுடைய நாரதர் வேலையை தொடங்கி இருக்கிறார்.

அதாவது கடந்த வாரம் அனன்யா வெளியேறி இருக்கும் நிலையில், பவா செல்லதுரை விருப்பமில்லாமல் வெளியே சென்று விட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்ற பெரிய ட்விஸ்ட் ரசிகர்கள் தலையில் இடியாய் விழ காத்திருக்கிறது. மாயா புறணி பேசுகிறேன் என்ற பெயரில் பிக் பாஸ் எதிர்பார்க்கும் கண்டென்ட்டை கொடுத்துக் கொண்டிருப்பதால் அவரை உடனே வெளியேற்ற வேண்டாம் என முடிவெடுத்து இருப்பது போல் தெரிகிறது.

இப்படித்தான் இரண்டாவது சீசனில் யாஷிகாவை வெளியேற்றினால் பரபரப்பு இருக்காது என பல காரணங்களை சொல்லி அவரை தொடர்ந்து சேவ் செய்து வந்தார்கள். அதேபோன்று வனிதா இல்லை என்றால் பரபரப்பு இருக்காது என்று மூன்றாவது சீசனில் எலிமினேஷன் ஆன அவரை உள்ளே கொண்டு வந்தார்கள். இப்போது மாயாவை சேவ் செய்வதற்காக இப்படி ஒரு ட்விஸ்ட்டை கொடுக்க இருக்கிறார் பிக் பாஸ்.

- Advertisement -

Trending News