Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கடந்த பல மாதங்களாக தேவையில்லாத ஒரு கேரக்டர் என்றால் அது அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ். சரியா சொல்லணும்னா 244வது எபிசோடில் கணேசனுக்கு ஏற்பட்ட விபத்தினால் இறந்து போகிற சூழ்நிலையை காட்டி அமிர்தாவை அவருடைய அப்பா அம்மாவிடம் ஒப்படைத்து நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு இறந்து போற சீன் காட்டப்பட்டிருக்கும்.
அப்படி இருக்கும் பொழுது கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத அளவிற்கு தற்போது இறந்தவர் மறுபடியும் உயிரோட வந்து என்னுடைய மனைவி அமிர்தா என் மகள் நிலா என்று சொல்லி அலப்பறை பண்ணுவது செட் ஆகவில்லை. இருந்தாலும் இந்த கேரக்டருக்கு கூடிய விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக அதை நோக்கி தற்போது கதை நகர்ந்து வருகிறது.
அமிர்தா, கணேசனை பார்த்த பிறகும் எந்தவித சந்தோசமும் இல்லாமல் எனக்கு எழில் தான் வேணும் என்று அவருடன் வாழ்ந்து வருகிறார். இதற்கு இடையில் கணேஷ் அவ்வப்போது பாக்யா வீட்டில் வந்து பிளாக் மெயில் பண்ணி அமிர்தாவிடம் பேச முயற்சி பண்ணுகிறார். அட்லீஸ்ட் அந்த நேரத்தில் அமிர்தா வாயைத் திறந்து எழில்தான் என்னுடைய கணவர் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்லி இருந்திருக்கலாம்.
Also read: சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி
அமிர்தா இப்படி வாயை மூடிட்டு அமைதியாக இருப்பதினால் கணேஷ் சைக்கோ தனமாக போலீஸிடம் கம்ப்ளைன்ட் கொடுத்து பாக்கியா வீட்டிற்கு போலீசை அழைத்து வருகிறார். பிறகு போலீஸ் வந்து அமிர்தாவை கூப்பிட்டு கேட்ட பிறகும் எழில் தான் எனக்கு வேணும் என்று சொல்லாமல் அப்படியே பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி வாயை மூடிட்டு இருக்கிறார் அமிர்தா.
இந்த மாதிரி காட்சிகளை பார்க்கும் பொழுது தான் இதெல்லாம் ஒரு நாடகமா என்று சொல்லும் அளவிற்கு வெறுப்பாக இருக்கிறது. தயவு செய்து கதை எதுவும் இல்லை என்றால் இந்த நாடகத்திற்கு எண்டு கார்டு போட்டு விடுங்கள் என்று பலரும் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். இதற்கிடையில் செழியன் வாழ்க்கையில் ஜெனி அப்பா வில்லனாக நுழைந்து பிரிக்க பார்க்கிறார்.
எப்படியாவது ஜெனி கூட சேர்ந்ததாக வேண்டும் என்று செழியன் போராடி வருகிறார். இப்படி பாக்கியாவின் இரண்டு மகன்களின் வாழ்க்கையை சிதைத்து விட்டு அதை சரி செய்யும் விதமாக கதையை ரொம்ப நாளாக இழுத்துட்டு வருகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக பாக்யாவின் ஆசைப்படி தொழில் அதிபராக வெற்றி பெற்று பெண்கள் நினைத்தால் சொந்தக்காலில் முன்னேறலாம் என்பதற்கு ஏற்ற மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டு முடிவடைய இருக்கிறது.
Also read: பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு