ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கோபியை தோற்கடிக்க துணிஞ்சு களத்தில் இறங்கிய பாக்கியா.. துணிந்தவர்க்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தையாம்

Bhakkiyalakshmi Serial: ஒரு நேரத்தில் விஜய் டிவியில் உருப்படியாய் போன சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி நாடகம் தான். இந்த ஒரு நாடகம் தான் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தில் வந்தது. ஆனால் சமீப காலமாக பெருசாக சொல்லும்படி கதை இல்லாததால் இதை பின்னுக்கு தள்ளி சிறகடிக்கும் ஆசை முதலிடத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும் எப்படியாவது இதை கொண்டு வந்து விட வேண்டும் என்று குட்டிக்கரணம் அடித்து வருகிறார்கள்.

அதனால் பெண்களை கவரும் வகையில் பாக்யாவை வைத்து புரட்சி செய்கிறார்கள். அதாவது கோபி முன் தன் குடும்பத்தை உயர்த்தி காட்ட வேண்டும் என்று பல சாகசங்களை செய்து வருகிறார் பாக்யா. தற்போது பாக்கியா தன் மாமியார் உதவியுடன் இனியாவை கல்லூரி ப்ராஜெக்ட் விஷயமாக கேரளா ரோட் ட்ரிப்புக்கு காரில் கூட்டிட்டு போகிறார்.

Also read: குணசேகரன் தலையில் இடியை இறக்கிய ஈஸ்வரியின் அப்பா.. மனுஷன் சொத்து போனதுக்கு கூட இந்த அளவுக்கு கலங்கலையே

போகும்போது டிரைவரின் அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்ததால் அவர் அப்படியே போய்விடுகிறார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் நடுரோட்டில் பாக்கியா தவித்துக் கொண்டிருக்கிறார். அப்போது இவருடைய மாமியார் திரும்ப நாம் வீட்டிற்கு போகலாம் இந்த ட்ரிப்பை கேன்சல் பண்ணிவிடலாம் என்று சொல்லுகிறார். இதை கேட்ட இனியா ரொம்பவே கவலையில் புலம்புகிறார்.

உடனே பாக்யா செழியன் மற்றும் எழிலுக்கு போன் பண்ணுகிறார். அவர்கள் போனை எடுக்காததால் இவருடைய நண்பர் பழனிச்சாமிக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்கிறார். அதற்கு அவர் நீங்கள் ஒன்றும் டென்ஷன் ஆக வேண்டாம், உங்களுக்கு தான் கார் ஓட்ட தெரியுமே தைரியமாக பொறுமையுடன் ஓட்டுங்கள் என்று நம்பிக்கை கொடுத்து பேசுகிறார்.

Also read: மகளுடன் சேர்ந்து பாக்யா அடிக்கும் கூத்து.. இவ்வளவு மட்டமாவா உருட்டுவீங்க என தலையில் அடிக்கும் கோபி

அந்த சமயத்தில் குழப்பத்தில் இருந்த பாக்யா, கோபி சொன்னது இவருடைய ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது கிளம்பும் முன் கோபி உன்னால இந்த தாம்பரம் வரக்கூட தாண்ட முடியாது என்று நக்கலாக பேசி அனுப்பினார். இதை நினைவில் வைத்து கோபியை இந்த விஷயத்தில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கார் ஓட்ட துணிந்து விட்டார்.

அதாவது துணிந்தவருக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை தான் என்பதற்கு ஏற்ப துணிச்சலுடன் ஒரு கை பார்த்திடலாம் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்கி காரை ஓட்ட ஆரம்பித்து விடுகிறார். இதனால் காருக்குள் இருந்த மாமியார், இனியா மற்றும் செல்வி அக்கா அனைவரும் கண்ணில் ஒரு பயத்துடன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாக்கியவை நம்பி போகிறார்கள். கண்டிப்பாக இதிலும் கோபி தோற்று பாக்கியா ஜெயிக்க தான் போகிறார்.

Also read: தேய்ந்துபோன டேப் ரெக்கார்டு சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவியின் புத்தம் புதுத் தொடர்கள்.. விறுவிறுப்பாக சூடு பிடிக்கும் 5 நாடகங்கள்

- Advertisement -

Trending News